'நிறைய சாதிக்கவேண்டும்'

'நிறைய சாதிக்கவேண்டும்'

1 mins read
aa8e09b4-c5e4-4458-820a-824a66f41318
-

தென்னிந்திய சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. இவர் 'அருந்ததி', 'இஞ்சி இடுப்பழகி', 'பாகமதி' போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தன் நடிப்பை விதைத்தவர்.

'பாகுபலி' படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். இவர் வயதை ஒத்த காஜல் தற்பொழுது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிப்பிட்டு, "ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை?" என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தற்போது இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அனுஷ்கா, "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. குழந்தைகளுடன் விளையாடவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை.

"பார்த்தவுடன் இவரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி ஒருவரைப் பார்க்கும் போதுதான் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

"பெற்றோர் எனக்கு 20 வயதிலிருந்தே திருமணம் செய்துகொள்ள நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஆனால் அதை இப்போது நிறுத்திவிட்டனர். எனக்கு சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை," என்றார்.

அனுஷ்கா 'நிசப்தம்' படத்தில், சாக்‌ஷி என்ற வேடத்தில் வாய்பேசாத, காது கேளாத ஓவியராக நடித்திருந்தார். 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.