'படத்தை உருவாக்கிய எங்களுக்கு அதிக வருத்தம்'

1 mins read
7806bbd6-75bf-4dec-925f-2ffb5677bd7b
-

'மாஸ்­டர்' படம் தாம­த­மா­வ­தை­ய­டுத்து 'படத்­தின் முன்­னோட்­டக் காட்­சி­யை­யா­வது வெளி­யி­டுங்­கள்,' என்று ரசி­கர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.­

அதைத் தொடர்ந்து படத்­தின் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் "மாஸ்­டர் படத்­திற்­காக காத்­தி­ருக்­கும் ரசி­கர்­கள் எப்­படி வருத்­த­மாக இருக்­கி­றார்­களோ, அதை உரு­வாக்கி வைத்­து­விட்டு ரசி­கர்­க­ளி­டம் காட்ட முடி­யா­மல் அவர்களைவிட அதிக வருத்­தத்­தில் படக்­கு­ழு­வி­னர் இருக்­கி­றோம்.

"ஆனால், படத்தை எப்­போது வெளி­யிட முடி­யும் என்­பது தெரி­யாத நிலை­யில் முன்­னோட்­டக் காட்சி வெளி­யி­டு­வ­தில் எந்த பிரயோசனமும் இல்லை. அது எந்த விதத்­தி­லும் படத்­திற்கு உத­வாது.

"இப்­போ­து­தான் திரை­ய­ரங்­கு­கள் திறக்க அனு­மதி கிடைத்­தி­ருக்­கிறது.

"எனவே, திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்டு மக்­கள் வர ஆரம்­பித்­த­வு­டன் கண்­டிப்­பாக 'மாஸ்­டர்' பற்­றிய செய்­தி­கள் வரும். விஜய் ரசி­கர்­க­ளுக்­காக இதைச் சொல்ல வேண்­டும் என்று நினைத்­தேன்," என்று தன்னுடைய டுவிட்டரில் பதி­விட்­டுள்­ளார்.