ரஜினியின் வாழ்க்கை படமாகிறது

ரஜினியின் வாழ்க்கை படமாகிறது

1 mins read
d80f7f09-7499-4e1a-9219-6c384645adaa
-

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? ரஜினி தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் அவரது வாழ்க்கையைப் படமாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன. இதில் அவரது மருமகனான தனுஷையே நாயகனாக நடிக்க வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

'ரன்', 'சண்டக்கோழி', 'பீமா', 'பையா' உள்ளிட்ட படங்களை இயக்கிய லிங்குசாமிதான் ரஜினியின் வாழ்க்கையைப் படமாக்குவதில் ஆர்வமாக உள்ளாராம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் படம் எதையும் இயக்கவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்தின் வாழ்க்கையைப் படமாக்குவதற்கான திரைக்கதையை அமைப்பதில் அவர் கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் அவர் விரைவில் தனுசுடன் இதுகுறித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.