தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொவிட்-19 தொற்று

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
220b97f9-b081-4d2f-8f80-83a2f10c8790
-
Google News Preferred Icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் தெலுங்கு திரை நட்சத்திரம் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறி வருகின்றன.

ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தமக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டதாக 1978ல் திரைக்கு அறிமுகமான திரு சிரஞ்சீவி கூறினார். தமக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று ஏற்பட்டதாக அவர், தனது அறிக்கையில் வெளியிட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ள நடிகர்களில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், ஜெனிலியா ஆகியோரும் அடங்குவர்.