பிக்பாஸ் நிகழ்ச்சி; இந்தியாவில் ஒளியேறும் அதே நாளில் சிங்கப்பூரிலும் காண வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி; இந்தியாவில் ஒளியேறும் அதே நாளில் சிங்கப்பூரிலும் காண வாய்ப்பு

1 mins read
5ed4d9a5-07e7-45c0-a154-3ce9d3b45c32
(படம்: ஹாட்ஸ்டார்)
Google News Preferred Icon

சிங்கப்பூர் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இன்று முதல் (நவம்பர் 10ஆம் தேதி) ஹாட்ஸ்டார் ஒளிபரப்புச் சேவையின்மூலம் காணலாம். உங்கள் அபிமான நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த பரபரப்பான நிகழ்ச்சியை இங்குள்ள ரசிகர்கள் 'ஹாட்ஸ்டார்' மூலமாக இந்தியாவில் ஒளியேறும் அதே நாளில் கண்டு ரசிக்கலாம்.

நிகழ்ச்சின் நெறியாளர் 'உலக நாயகன்' கமல்ஹாசனுடன் 16 பிரபலங்கள் 100 நாட்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றனர். கூத்து, கும்மாளம், அவ்வப்போது சில திகில் ஊட்டும் சம்பவங்கள் என பார்வையாளர்களை சிரிக்கவும் அனுதாபப்படவும் வைக்கும் இந்நிகழ்ச்சியைக் கண்டு தீபாவளியை நீங்கள் வரவேற்கலாம்.

பிக் பாஸ் வீட்டின் பங்கேற்பாளர்கள் தீபாவளியை மட்டுமின்றி கிறிஸ்மசையும் ஆங்கிலப் புத்தாண்டையும் கொண்டாடவுள்ளனர்.

ஹாட்ஸ்டார் சேவையின் இணையத்தளம் (www.hotstar.com/sg ) மூலமாகவோ செயலி மூலமாகவோ சிங்கப்பூர் வாடிக்கையாளர் ஆண்டுக்கு 69.98 கட்டணத்திற்கு சந்தாதாரர்களாகலாம். ஆப்பிள்டிவி, ஆண்ட்ராண்ட் டிவி மற்றும் குரோம்காஸ்ட் வழியாகவும் ரசிகர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.