அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை

2 mins read
0d7ecad2-2c87-4c3c-b101-bc58d77931e6
-

ஆண்­டு­தோ­றும் 'இன்­டி­யன் பிலிம் புரா­ஜக்ட்' என்ற அமைப்பு மூலம் நடத்­தப்­படும் குறும்­ப­டப் போட்­டி­கள் பிர­சித்தி பெற்­றவை. இந்­தப் போட்­டி­யில் இளம் இயக்­கு­நர்­கள் கலந்து கொள்­வார்­கள்.

போட்டி நடத்­து­ப­வர்­கள் ஒரு வரி மட்­டுமே கொடுப்­பார்­கள். அந்த ஒரு வரியை வைத்­துக் கொண்டு 50 மணி நேரத்­திற்­குள்­ளாக ஒரு குறும்­ப­டம் இயக்க வேண்­டும்.

இந்த ஆண்டு நடந்த போட்­டி­யில் நடிகை காயத்ரி கலந்து கொண்­டார். அவ­ருக்கு 'டாக்­டர் அப்­துல் கலா­மின் வாழ்க்கை' என்ற ஒரு வரி கொடுக்­கப்­பட்­டது. அந்த ஒரு வரியை தனது குழு­வு­டன் இணைந்து விவா­தித்து 'ரோட் டூ தும்பா' என்ற குறும்படத்தை இயக்­கி­னார் காயத்ரி.

இந்­தக் குறும்­ப­டத்­திற்கு விருது கிடைத்­துள்­ளது.

இந்­தப் படத்தை அவர் கைத் தொலை­பே­சி­யில் பட­மாக்கி உள்­ளார்.

இது­கு­றித்து காயத்ரி கூறு­கை­யில், "கொடுக்­கப்­பட்ட 50 மணி நேரத்­தில் 20 மணி நேரம் கதை விவா­தத்­தி­லேயே முடிந்­தது.

"டாக்­டர் ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் ஐயா­வின் சுய­ச­ரி­தை­யில் உள்ள ஏதே­னும் ஒரு பகு­தியை எடுக்க நினைத்­தேன். அவர் மிதி­வண்­டி­யில் 'ராக்­கெட்' பாகங்­கள் எடுத்­துச் செல்­வது போன்ற புகைப்­ப­டத்­தைப் பார்த்­தேன். உடனே அதன் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஒரு கதையை முடிவு செய்­தோம்.

இந்­தி­யா­வில் முதல் ராக்­கெட்டை விண்­வெ­ளி­யில் செலுத்­த சரி­யான இடம் தேடு­கி­றார்­கள். எங்கு தேடி­யும் கிடைக்­காத நிலை­யில் இறு­தி­யாக ஒரு தேவா­ல­யம் அமைந்த இடத்­தைத் தேர்வு செய்­கின்­ற­னர்.

"ஆல­யம் உள்ள அந்த இடத்தைப் பெற முடிந்­ததா? ஆன்­மி­க­மும் - அறி­வி­ய­லும் இரு துரு­வங்­கள். ஆனால், நாட்­டிற்­காக இவை இரண்­டும் ஒன்­றி­ணைந்­தனவா என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்­ன­ணியில் இப்­ப­டத்தை இயக்­கி­னேன்.

"தேவா­ல­யத்­தின் பாதி­ரி­யார் வேடத்­தில நடி­கர் பக­வதி பெரு­மா­ளும் (பக்ஸ்), விக்­ரம் சாரா­பாய் வேடத்­தில் நடி­கர் கார்த்­திக்­கும் நடித்­தி­ருந்­தது படத்­திற்கு பலம் சேர்த்­தது.

"மேலும் பக­வதி பெரு­மாள் பேசிய வச­னங்­கள் பெரும்

­பா­லும் அவரே எழு­தியவை. இறு­தி­யில் பாதி­ரி­யார் பேசும் வச­னங்­கள் டாக்­டர் ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் ஐயா­வின் புத்­த­கத்­தில் இருந்து எடுக்­கப்­பட்­டவை.

"இந்தக் குறும்­ப­டத்­தின் ஒளிப்­ப­திவை 'கழுகு' படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ளர் சத்யா பொன்­மார் மேற்­கொண்­டார். இசை அனி­ருத். இந்த விருது எனது குழு­விற்கு பெரும் மகிழ்ச்­சி­யை­யும் பெரு­மை­யை­யும் அளித்­தது.

"இப்­ப­டத்தை தேர்வு செய்த போட்டி நடு­வர்­க­ளுக்­கும் 'இன்­டி­யன் பிலிம் புரா­ஜக்ட்' தளத்­திற்­கும் எங்­க­ளது குழு­வின் சார்­பாக மன­மார்ந்த நன்­றி­கள்," என்­றார் நடிகை காயத்ரி.

இவர் விஜய் சேது­ப­தி­யு­டன் மட்­டும் 5 படங்களில் நடித்­துள்­ளார். அவ­ரு­டன் அதிக படத்­தில் நடித்­துள்ள ஒரே நடி­கை­யும் இவர்­தான். எத்­த­னையோ படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் 'நடு­வுல கொஞ்­சம் பக்­கத்த காணோம்' படத்­தில் வரும் இவ­ரது காட்­சி­களை யாரா­லும் மறக்க முடி­யாது.

இவர் இது­வரை குடும்­பப் பாங்­கான படங்­களில் மட்­டுமே நடித்து வந்­தார். திடீ­ரென்று நவ­நா­க­ரீக உடை­யில் படங்­கள் பிடித்து அதை தனது 'இன்ஸ்­ட­கி­ராம்' பக்­கத்­தில் தற்போது பதி­விட்­டுள்­ளார்.