படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம்

படத்தைப் பார்க்க இந்த 4 காரணங்கள் போதுமாம்

2 mins read
fa6cf9a0-e010-4786-8ec1-76a4f1dcd717
படம்: ஊடகம் -

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படம் இன்று 'அமேசான் ப்ரைம்' வீடியோ தளத்தில் வெளியாகிறது.

குறைந்த விலை விமானச் சேவை 'ஏர் டெக்கா'னின் நிறுவனரும் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது. இந்தப் படத்தை மக்கள் பார்க்க நான்கு காரணங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.

- உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது இந்தப் படம். இயக்குநர் சுதாவும் அவரது அணியும் தரமான ஒரு திரைப்படத்தை உருவாக்க நேரம் செலவிட்டுள்ளனர். தேவையற்ற எந்த விஷயங்களும் இல்லாமல் உண்மையான வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை ரசிகர்களின் கண்களுக்காக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. - அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது. அது இன்றைய சூழலில் வெளியாவது பலரையும் சிந்திக்க வைக்கும். - இந்தப் படம் 200 நாடுகளில் வெளியாகிறது. உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறைந்த இந்த அட்டகாசமான 'ஆக்‌ஷன்' கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது மற்றொரு காரணம். - சுதா மற்றும் சூர்யா சொல்லி அடிக்கும் கூட்டணி. சுதாவின் நுட்பமும் சூர்யாவின் திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும். துல்லியமான பார்வை இருக்கும் ஓர் இயக்குநராக சுதா அறியப்படுகிறார்.

இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல இரண்டு ஆண்டுகளாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யாவோ இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 விழுக்காடு உழைப்பவர். அவருடைய உழைப்பைப் பார்ப்பதற்காகவே இந்தப் படத்தைக் கட்டாயம் உலக மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்கிறது படக்குழு.