பிரபு தேவாவுக்கு மீண்டும் திருமணமா?

பிரபு தேவாவுக்கு மீண்டும் திருமணமா?

1 mins read
2cae4e5b-89f4-4d81-88c4-8327b69b0879
படம்: தமிழக ஊடகம் -

தமிழ்த் திரையின் முன்னணி நாயகியான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்யும் நிலைக்குச் சென்றார் பிரபு தேவா. பின்னர் சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டது. தற்பொழுது இவர் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

குழுவில் நடனமாடி பின்னர் நடன இயக்குநராக திரைத்துறையில் காலடி வைத்து, நடிகராகி, தற்பொழுது இயக்குநராக தனது முத்திரையைப் பதித்து வருகிறார் பிரபு தேவா.

இவர் தனது மனைவி ரம்லத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் அவரை விவாகரத்து செய்தார்.

அதையடுத்து நயன்தாராவுடன் நெருங்கிப் பழகினார். பின்னர் அந்தக் காதல் முறிந்த நிலையில் பிரபுதேவா அவரது சகோதரியின் மகளுடன் பழகி வருவதாகவும் அவரைத் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது.

தற்போது பிரபுதேவா சல்மான் கான் நடிப்பில் 'ராதே' படத்தை இயக்கி வருகிறார். தமிழில் 'பொன் மாணிக்கவேல்', 'தேள்', 'யங் மங் சங்', 'பகீரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

'பொன் மாணிக்கவேல்' படம் பிரபுதேவாவின் 50வது படமாகும். இப்படத்தில் முதல் முறையாக போலிசாக நடித்து வருகிறார். சிலைத் திருட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.