தீபாவளியன்று கண்ணுக்கு விருந்தளிக்கும் 'மாஸ்டர்'

தீபாவளியன்று கண்ணுக்கு விருந்தளிக்கும் 'மாஸ்டர்'

1 mins read
212c799e-f202-4214-9518-3cff4570cb23
படம்: தமிழக ஊடகம் -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியிடத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஏப்ரலில் வெளியாக வேண்டிய 'மாஸ்டர்' படம் பின்வாங்கியது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால், 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தெரிகிறது.

பாடல்கள் வெளியாகிவிட்டாலும் முன்னோட்டக் காட்சிகள் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை.

பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு முன்னோட்டக் காட்சி வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறது படக்குழு.

குறிப்புச் சொற்கள்