‘சூரரைப் போற்று’ - சூர்யாவைப் போற்று

'சூர­ரைப்­போற்று' திரைப்­ப­டம் நேற்று முன்தினம் வெளி­யான நிலை­யில் திரைத்­துறை பிர­ப­லங்­கள் பல­ரும் சூர்­யா­வின் நடிப்­பை­யும் சுதா­வின் இயக்­கத்­தைப் பற்­றி­யும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

தொடர் தோல்­வி­க­ளைச்

சந்­தித்து வந்த சூர்­யா­விற்கு இந்தப் படம் மீண்­டும் திருப்­பு­மு­னை­யாக அமைந்­துள்­ளது. சுதா கொங்­க­ரா­வின் இயக்­கம், ஜிவி­யின் இசை, சூர்யா, அபர்ணா பால­மு­ர­ளி­யின் அசத்­த­லான நடிப்பு ஆகி­யவை படத்தை கோலி­வுட்­டில் மிகச் சிறந்த பட­மாக வடி­வ­மைத்­துள்­ளது.

படத்­தைப் பார்த்த அனை­வ­ரும் படம் எதிர்பார்க்காத அளவிற்கு பிரமாதமாக இருப்பதாக திரைப் பிர­ப­லங்­கள் சூர்யா, சுதா கொங்­க­ரா­வைப் பாராட்டி வரு­கின்­ற­னர்.

நடி­கர் மாத­வன் 'சூர­ரைப் போற்று' படத்­தைப் பற்றி பாராட்டி பதி­விட்­டுள்­ளார். "சூர்யா, ஒரு சிறந்த, கட்­டுப்­

ப­டுத்­தப்­பட்ட, நேர்­மை­யான மற்­றும் உற்­சா­க­மான நடிப்பு. ஒரே நேரத்­தில் என் சகோ­த­ரர் மீது பொறா­மை­யும் பெரு­மை­யும் ஏற்­ப­டு­கிறது. உங்­களை இப்­ப­டிப் பார்க்­கத்­தான் ஆவ­லு­டன் இருந்­தோம். மேலும் நீங்­கள் ஒரு நடி­க­ராக எல்லா எதிர்­பார்ப்­பை­யும் தாண்­டி­விட்­டீர்­கள். மொத்த படக்­கு­ழு­விற்­கும் பெரிய கட்­டிப்­புடி வைத்தியம்," என்றார்.

நடி­கர் அருண்­வி­ஜய் "இந்­தப் படத்­தில் சூர்யா அபா­ர­மாக நடித்­தி­ருக்­கி­றார். அனைத்துக் கதாப்­பாத்­தி­ரங்­களும் அவர்­க­ளு­டைய பாத்­தி­ரத்தை சிறப்­பாக செய்­துள்­ள­னர். அனைவரையும் ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் உள்­ளது. இயக்­கு­நர் சுதா, மொத்த படக்­கு­ழு­வுக்­கும் பெரிய வணக்­கம். சிறப்­பாய் செய்­தி­ருக்­கி­றீர்­கள். மேலும் உயர பறக்க வாழ்த்­து­கள்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து, "இந்த வெற்­றிப் படத்­திற்­காக 9 மாதங்­கள் காத்­தி­ருந்­தேன்.

'சூர­ரைப்­போற்று' இத­யத்தை நிறைத்தது. படம் அருமை. இதில் நடித்த சூர்யா, படக்­கு­ழு­வி­னர் அனை­வ­ருக்­கும் பாராட்­டுக்­கள்," என பதி­விட்­டுள்­ளார்.

தெலுங்கு நடி­கர் மோகன் பாபு, "சூர்யா ஒரு நல்ல நடி­கர். அவ­ரு­டன் இணைந்து நடித்­த­தில் மகிழ்ச்சி. அற்­பு­த­மான இயக்­கு­நர் சுதா கொங்­கரா. இந்த படம் ஒரு 'மைல் ஸ்டோ­னாக' இருக்க வேண்­டும். 'சூர­ரைப்­போற்று' குழு­வி­ன­ருக்கு கட­வு­ளின் ஆசிர்­வா­தங்­கள்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதுபோல் திரைக் கலைஞர்கள் பலரும் 'சூரரைப் போற்று' படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

மொத்தத்தில் 'சூரரைப்போற்று' சூர்யாவை போற்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!