தாவர அடிப்படையிலான உணவுகளின் நன்மையைப் பற்றி அறிந்த சமந்தா மெலிந்த தசையை வளர்ப்பதற்குத் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பதிவிட்டுள்ளார்.
தினமும் 5 முட்டை, கோழி, ஆடு பிரியாணி சாப்பிட்டால்தான் வலுவாக, ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவு உண்டாலே உடல் வலுவாக, ஆரோக்கியமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
மேலும் அவர் அற்புதமான உடற்பயிற்சி நெறிமுறைகள் மற்றும் உணவுத் தேர்வுகளுக்குப் பெயர் பெற்றவர். தாவர அடிப்படையிலான உணவின் பயன்களை இன்ஸ்டகிராம் வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளார் சமந்தா.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன், விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றார். பின்னர் தெலுங்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் ஒரு வாரத்துக்கு தொகுத்து வழங்கினார். இது நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு, 'ஆஹா' என்ற 'ஓடிடி' தளத்தில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்காக அவர் அணியும் சட்டை வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துணியால் உருவான ஆடை அது. வித்தியாசமான வண்ணங்களில் காணப்படும் இந்த உடை பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
சமந்தா தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கும்
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடனும் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

