நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவரது இளைய மகள் சௌந்தர்யா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா காலத்தில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெளியே செல்வதைத் தவிர்த்து வருகிறார் ரஜினி. எனினும் இம்முறையும் தீபாவளியன்று தன் வீட்டின் முன் கூடிய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார் ரஜினி.
பின்னர் மகள் சௌந்தர்யா அவரது கணவர், மனைவி மற்றும் பேரனுடன் அவர் பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார். சௌந்தர்யா பதிவிட்ட புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

