கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவதாஸ் பிரதர்ஸ்'. ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என மேலும் மூன்று நாயகிகள் உள்ளனர். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். தரன் இசையமைத்துள்ளார். "சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார்கள். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதுதான் கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது படத்தின் முடிவில் தெரியும்," என்கிறார் இயக்குநர் ஜானகி ராமன்.
நான்கு இளைஞர்களின் கதையை விவரிக்கும் 'தேவதாஸ் பிரதர்ஸ்'
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

