இமாலய சாதனை படைத்த 'மாஸ்டர்'

இமாலய சாதனை படைத்த 'மாஸ்டர்'

1 mins read
a8b878d1-e8ba-4576-bf15-87e3caf49248
படம்: தமிழக ஊடகம் -

தளபதி விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

தீபாவளியன்று மாலை 6 மணிக்கு 'மாஸ்டர்' படத்தின் முன்னோட்டக் காட்சியை ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக படக்குழுவினர் வெளியிட்டனர்.

முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 18 லட்சம் பேர் முன்னோட்டக் காட்சியை 'லைக்' செய்துள்ளனர்.

குறுகிய நேரத்தில் அதிக பார்வைகள் மற்றும் 'லைக்ஸ்' பெற்றது 'மாஸ்டர்' படத்தின் முன்னோட்டக் காட்சி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதைப் படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோட்டக் காட்சியைப் போலவே படமும் வெளியாகி பல சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்