சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாமாக ஷேக் மைதீன்

1 mins read
3d6c27a8-6628-46c8-8ab9-99d594ee6e37
படம்: தமிழக ஊடகம் -

சூரரைப் போற்று படத்தில் மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாம் கதாபாத்திரமும் இடம் பெற்றிருந்தது.

"தம்பி மதுரையா?" என்ற குரல் கேட்டவுடன் படம் பார்த்த அனைவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது.

உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர்தான் அப்துல் கலாம் வேடத்தில் நடித்திருந்தார்.

ஷேக் மைதீன் அப்துல் கலாமின் உருவ தோற்றத்தைப் போலவே இருந்தார் .

கலாம் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னை அவரைப் போலவே உருவத்திலும் மாற்றிக்கொண்டார்.

இதனாலேயே இவர் உடுமலை கலாம் என்று மக்களால் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த ஷேக் மைதீன், படத்தைப் பார்ப்பதற்கு முன்பே காலமாகிவிட்டார் என்பது வருத்தமான செய்தி.

அப்துல் கலாமின் கதாபாத்திரத்திற்கு கலக்கப்போவது யாரு நவீன் குரல் கொடுத்திருந்தார்.