சுடச் சுடச் செய்திகள்

மூன்று வேடங்களில் கலக்கும் சந்தானம்

சந்­தா­னத்­தின் நடிப்­பில் ‘பிஸ்­கோத்’ படம் தீபா­வ­ளி­யன்று திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது. திரை­ய­ரங்­கி­ல் தன்­னு­டைய ரசி­கர்­க­ளு­டன் படம் பார்த்த சந்­தா­னம், பல போராட்­டங்­க­ளுக்கு இடையே ‘ஓடிடி’யில் வெளி­யி­டா­மல் திரை­ய­ரங்­கில் படத்தை வெளி­யிட்­ட­தைப் பற்றி ரசி­கர்­க­ளுக்கு விளக்­கம் அளித்­தார்.

கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் மூடப்­பட்ட திரை­ய­ரங்­கு­கள் தற்­போது மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன. 50 விழுக்­காட்டு இருக்­கை­கள் மட்­டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது.

இந்த தீபா­வ­ளிக்கு வெளி­யாக வேண்­டிய பல முன்­னணி நடி­கர்களின் படங்­கள் 2021க்கு தள்­ளி­வைக்­கப்­பட்­டா­லும் கடந்த மே மாதம் வெளி­யாக வேண்­டிய ‘பிஸ்­கோத்’ படம் தீபா­வளி விருந்­தாக வெளி­யா­கி­யுள்­ளது.

தீபா­வ­ளி­யன்று வெளி­யான இந்­தப் படத்தை கமலா திரையரங்­கில் ரசி­கர்­க­ளு­டன் இணைந்து பார்த்­தார் சந்­தா­னம். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்களைச் சந்­தித்த சந்­தா­னம், “ஓடிடி’ என்­பது பூஜை அறை போன்­றது. திரை­ய­ரங்­கம் கோயில் போன்­றது.

“பிஸ்­கோத் படத்தை ‘ஓடிடி’யில் பார்க்­கக்­கூ­டாது. திரை­ய­ரங்­கு­க­ளில்­தான் பார்க்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட்­டோம். ரசி­கர்­களை மட்­டுமே நம்பி தமிழ் சினிமா உள்­ளது. பார்­வை­யா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க என்­னால் தமிழ்­நாட்­டின் அனைத்து திரை­ய­ரங்குகளுக்­கும் செல்ல முடி­யாது. அத­னால் கமலா திரை­ய­ரங்­கில் ரசி­கர்­க­ளு­டன் கேக் வெட்டி கொண்­டாடி மகிழ்ந்­தேன்.

“கொரோனா பயத்­தால் பார்­வை­யா­ளர்­கள் திரை­ய­ரங்­கிற்கு வர­வில்லை என்­றால் அனைத்­தும் வீணா­கி­வி­டும் என்று இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ளர்­களும் திரையரங்­கில் படத்தை வெளி­யி­டப் பயந்­த­னர். ஆனால், தமி­ழக மக்­கள் குறித்து எனக்கு நம்­பிக்கை இருந்­தது. அத­னால் தைரி­ய­மாக திரை­ய­ரங்­கில் வெளி­யி­ட­லாம் என்ற முடி­வில் இருந்­தேன். என் நம்­பிக்கை வீணா­க­வில்லை. மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. இதற்­காக மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க விரும்­பு­கி­றேன்,” என்று கூறி­னார்.

குடி­சைத் தொழி­லாக அவ­ரின் தந்தை ‘ஆடு­க­ளம்’ நரேன் ‘பிஸ்­கோத்’ தயா­ரித்து விற்­பனை செய்­கி­றார். தொழி­லில் அவ­ருக்கு உத­வி­யாக அவ­ரின் நண்­பர் ஆனந்த்­ராஜ் இருக்­கி­றார்.

தன் மகனை உயர்­வான இடத்­தில் வைக்­க­வேண்­டும் என்­பது நரே­னின் ஆசை. இந்­நி­லை­யில் சந்­தா­னம் குழந்­தை­யாக இருக்­கும்­போது அவ­ரின் தந்தை திடீ­ரென இறந்­து­வி­டு­கி­றார். பின் சந்­தா­னம் என்ன ஆனார்? ‘பிஸ்­கோத்’ தயா­ரிக்­கும் தொழில் என்ன ஆனது? அப்பா நரே­னின் ஆசை நிறை­வே­றி­யதா என்­பது இந்த ‘பிஸ்­கோத்’ தயா­ரிப்பு.

இந்­தப் படத்­தில் சந்­தா­னம் மூன்று வேடங்­களில் நடிக்­கி­றார். சந்­தா­னம் படம் என்­றால் படம் பார்க்­கும் அனை­வ­ரின் முகத்­தி­லும் சிரிப்பு இருக்­கும்­தானே. அந்த சிரிப்­போடு திரை­ய­ரங்­குக்­குள் வந்­த­வர்­களைச் சிரிக்க வைத்து மகிழ்ச்­சி­யால் மனதை நிறைத்து வெளியே அனுப்­பு­கி­றார் சந்­தா­னம். சிரிப்­புக்கு உத்­த­ர­வா­தம் கொடுக்­க­லாம்.

ஆனந்த் ராஜ் இந்­தப் படத்­தில் வரு­வ­து­போ­லவே தொடர்ந்து செய்­தால் அவ­ருக்கு நல்ல வாய்ப்பு. நகைச்­சு­வைக்கு சந்­தா­னத்­து­டன் மொட்டை ராஜேந்­தி­ரன், லொள்ளு சபா மனோ­கர். மூவ­ரின் கூட்­ட­ணி­யும் சிரிப்­புடன் படம் பார்ப்­ப­வர்­க­ளைத் திக்கு முக்­காட வைக்­கிறது. இதற்­கா­கவே இயக்­கு­ந­ருக்­கும் நன்றி சொல்­ல­வேண்­டும்.

பழம் பெரும் நடிகை சௌகார் ஜான­கிக்கு இப்­ப­டம் 400வது படம். கலை நயம் குறை­யாத அதே முக­பா­வம். அவர் கதை சொல்­லும்­போது இன்­னும் கொஞ்­சம் அழகு. நடன இயக்­கு­நர் சிவ­சங்­க­ரும் அவ­ரின் நண்­பர்­களும் இந்தப் படத்­தில் கலக்­கு­கி­றார்­கள்.

நகைச்­சுவை நடி­கர்­க­ளின் கலக்­க­லான கூட்­டணி ரசி­கர்­க­ளுக்கு திருப்தி அளிக்கிறது. மற்­ற­வர்­கள் பேசும் சில வச­னங்­கள் வாழ்க்­கை­யின் எதார்த்­தத்­தைப் பேசு­கிறது. அழுத்­த­மான கதை மட்­டும் இல்லை என்­கின்­ற­னர் படம் பார்த்­த­வர்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon