சுடச் சுடச் செய்திகள்

கதாநாயகர்களின் அடுத்த கட்ட நகர்வுகள்

கொரோனா விவ­கா­ரம் எப்­போது முடி­வுக்கு வரும் என்­பது தெரி­யாத நிலை­யில் முன்­னணி நடி­கர்­கள் என்ன செய்­கி­றார்­கள்? என்ன திட்­டம் வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது குறித்து பல்­வேறு தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

ரஜி­னி­யைப் பொறுத்­த­வரை ஜன­வரி வரை யாரை­யும் சந்­திக்க விரும்­ப­வில்­லை­யாம். தற்­போது சென்­னைக்கு அருகே உள்ள தனது பண்ணை வீட்­டில் தங்கி இருப்­ப­வர், யோகா, தியா­னம் செய்­வது, நாளே­டு­கள் படிப்­பது, தொலைக்­காட்சி செய்தி அலை­வ­ரி­சை­க­ளைக் கவ­னிப்­பது என பொழு­தைக் கழிப்­ப­தா­கத் தக­வல்.

மிக முக்­கி­ய­மான விஷ­யம் என்­றால் மட்­டும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொலை­பே­சி­யில் பேசி­வி­டு­கி­றா­ராம். ‘அண்­ணாத்த’வுக்­குப் பிறகு இவர் கே.எஸ். ரவி­க்கு­மார் இயக்­கத்­தில் நடிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் ஒரு தக­வல் பரவியுள்­ளது.

‘இந்­தி­யன்-2’ பல்­வேறு சிக்­கல்­க­ளால் முடங்­கி­யுள்ள நிலை­யில் ‘பிக்­பாஸ்’ நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றுள்­ளார் கமல்.

‘இந்­தி­யன்-2’ல் நாய­கி­யாக ஒப்­பந்­த­மான காஜல் அகர்­வால் திரு­ம­ணம் செய்­து­கொண்­டுள்ள நிலை­யில், மற்­றொரு நாய­கி­யான ரகுல் பிரீத்­சிங்கோ போதை மருந்து விவ­கா­ரத்­தில் சிக்கி உள்­ளார். இத­னால் தயா­ரிப்பு நிறு­வ­னம் இப்­ப­டத்­தைக் கைவி­ட­வும் வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எனி­னும் லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் கமல் நடிக்­கும் படத்­துக்­கான படப்­பி­டிப்பு விரை­வில் தொடங்க உள்­ளது.

‘பேர­ரசு’ இயக்­கும் படத்­தில்­தான் விஜய் அடுத்து நடிப்­பார் என்று கூறப்­ப­டு­வது தவ­றான தக­வல் என்று ஒரு தரப்பு கூறி­வ­ரு­கிறது. ஆனால், பேர­ரசு தரப்­பில் திடீ­ரென ஓர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்டு அவர் கதை விவா­தத்­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­க­வும் சிலர் வதந்தி கிளப்பி விட்­டுள்­ள­னர். எது எப்­ப­டியோ கிறிஸ்­மஸ் பண்­டி­கைக்­குள் விஜய் தனது அடுத்த படத்­தின் இயக்­கு­நரை நிச்­ச­யம் முடிவு செய்­து­வி­டு­வார் என்­பதே இப்போதைய தக­வல்.

‘வலிமை’ படத்தை இந்­தாண்டே முடித்­து­வி­ட­வேண்­டும் என்­ப­து­தான் அஜித்­தின் திட்­ட­மாக இருந்­தது. அவ­ரது கொள்­கைப்­படி ஒரு படத்தை முடித்து­விட்­டு­தான் அடுத்த பட வேலை­யில் இறங்­கு­வார்.

ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்ட உட­னேயே படப்­பி­டிப்­புக்குத் தயா­ராகிவிட்­டா­ராம் அஜித். ஆனால் கேர­ளா­வில் பிருத்­வி­ராஜ், ஹைத­ரா­பாத்­தில் தமன்னா என பல­ரும் கொரோனா கிரு­மிப்­பி­டி­யில் சிக்­கி­யதை அடுத்து படப்­பி­டிப்பை நிறுத்­தச் சொல்­லி­விட்­டா­ராம்.

அடுத்த கல்­வி­யாண்­டில்­தான் தம் பிள்­ளை­க­ளைப் பள்­ளிக்கு அனுப்­ப­வேண்­டும் என்­றும் அவர் முடிவு செய்­தி­ருப்­ப­தா­கத் தக­வல். தற்­போது உடற்­ப­யிற்சி, யோகா­ச­னம் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­து­கி­றார் அஜித்.

கார்த்தி நடிக்­கும் ‘சுல்­தான்’ படத்­தின் இயக்­கு­நர் பாக்­ய­ராஜ் கண்­ண­னுக்கு வேலூ­ரில் திரு­ம­ணம் நடை­பெற்­றது. கார்த்­தி­யால் நேரில் சென்று வாழ்த்த முடி­ய­வில்லை.

எனி­னும் மண­மே­டை­யி­லேயே இப்­ப­டத்­தின் முதல் தோற்ற சுவ­ரொட்­டியை வெளி­யிட வைத்­துத் திரு­ம­ணப் பரிசை அளித்­துள்­ளார். இதை­விட மிகச்­சி­றந்த பரிசு எனக்­குக் கிடைக்­காது என்று மகிழ்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

‘சுல்­தான்’ படம் முடிந்த பின்­னர் ‘இரும்­புத்­திரை’ மித்­ரன் இயக்­கும் படத்­தில் நடிக்­கி­றார் கார்த்தி. மித்­ரன் சொன்ன கதை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­யச் சொல்லி இருக்­கி­றா­ராம். அந்­தப் பணி முடிந்த கையோடு படப்­பி­டிப்­பைத் துவங்க உள்­ள­னர்.

‘டாக்­டர்’, ‘அய­லான்’ படங்­களை அடுத்து தேசிங்கு பெரி­ய­சா­மி­யின் இயக்­கத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்­ளா­ராம் சிவ­கார்த்­தி­கே­யன். இதில் ரகுல் பிரீத்­சிங்கை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்ய உள்­ள­னர். டிசம்­ப­ரில் படப்­பி­டிப்பு துவங்­கும் எனத் தகவல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon