சுடச் சுடச் செய்திகள்

'ரவுடி பேபி' சாதனை; எதிர்ப்பை கிளப்பிய தனுஷின் சுவரொட்டி

2018ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க தனுஷ், சாய் பல்லவி நடித்த திரைப்படம் ‘மாரி 2’. 

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்த முதல் தென்னிந்தியப் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தப் பாடலின் சாதனையை விளக்கும் வகையில் தான் மட்டும் காரணம் என்பதுபோல் தன்னுடைய படத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.  

இதனால் கடுப்பான சாய் பல்லவி ரசிகர்கள், “ரவுடி பேபி பாடல் வெற்றி பெற தனுஷ் மட்டும் காரணம் அல்ல. சாய் பல்லவியின் நடனம்தான் முக்கியக் காரணம். 

பிரபுதேவா சொல்லிக் கொடுத்த நடன அசைவுகள் அனைத்தையும் சாய் பல்லவி ஆடி இருப்பார். அப்படி இருக்கும்போது சாய் பல்லவியை ஓரம்கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? என்று எதிர்ப்புத் தெரிவித்து பதிவுகள் போட்டதுடன் சாய் பல்லவியின் புகைப்படம் மட்டும் இருக்கும் சுவரொட்டியை ரசிகர்கள் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon