சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் துவங்கியது. புதுச்சேரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'மாநாடு' படம் குறித்த செய்திகளை இம்மாதம் 19ஆம் தேதி காலை 9.09 மணிக்கு வெளியிட்டார்கள்.
இதற்கு முன் மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் முன்னோட்டக் காட்சியும் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்ற செவ்வாய்க்கிழமை காலை 9.09 மணிக்கு வெளியானது.
இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் சிம்பு ஏதோ வம்பு செய்வது போன்று இருக்கிறதே என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் முன்னோட்டக் காட்சி தீபாவளி அன்று காலை 4.32 மணிக்கு வெளியானது.
அதையும் கூட்டிப் பார்த்தால் 9 வருகிறது. 9.09 மணியை கூட்டினால் 18 வருகிறது அதையும் கூட்டினால் 9 வருகிறது. 'மாநாடு' படத்தின் முதல் சுவரொட்டி 10.44 மணிக்கு வெளியானது. அதைக் கூட்டினாலும் 9 வருகிறது.
அது ஏன் சிம்பு திடீர் என்று 9ல் ஆர்வம் காட்டுகிறார் என்று சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவரின் முன்னாள் காதலி நயன்தாரா. அவருடைய பெயரில் நயன் என்ற எண் இருப்பதால் சிம்பு எல்லாவற்றிற்கும் எண் 9ஐ சேர்க்கிறார் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வரும் என்கின்றனர் ஒரு சிலர்.
சிம்பு நல்ல நேரம் பார்த்து முக்கியச் செய்திகளை வெளியிடுகிறார். அதைப் போய் இப்படி எல்லாம் கணக்குப் பார்த்தால் என்ன செய்வது என்று சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிம்பு தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதுடன் அனைவரும் உடற்பயிற்சி செய்து தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

