சூர்யாவின் தம்பியின் பெயர் இந்த ரசிகருக்கு; சூர்யாவின் கதாபாத்திர பெயர் இவரது குழந்தைக்கு

சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவரது தீவிர ரசிகர் ஒருவர் தமக்குப் பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு ‘மாறா’ என்று பெயரிட்டு சூர்யாவின் மீதான பேரன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தீபாவளியையொட்டி வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பலரும் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ‘டப்பிங்’ செய்யப்பட்ட இப்படத்தைத் திரைத் துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.

அவர்களே இப்படியென்றால், சூர்யா ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? என்பதை நிரூபிக்கும் விதமாக பெங்களூரைச் சேர்ந்த சூர்யா ரசிகரான கார்த்தி என்பவர், தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு
சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திர பெயரான ‘மாறா’ என்ற பெயரை வைத்துள்ளார்.

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் பெயர் ‘நெடுமாறன் ராஜாங்கம்’. ஆனால், எல்லோரும் சுருக்கி கூப்பிடுவது ‘மாறா’தான். கடந்த 25 வருடங்களில் சூர்யா எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் ‘மாறா’ பெயரை மட்டும் வைக்க காரணம், படத்தைப் பார்க்கும் இளையர்களுக்கு மட்டுமல்ல, அத்தனை வயதினருக்கும் உத்வேகம் கொடுத்து சாதிக்கத்தூண்டியது ‘மாறா’ கதாபாத்திரம்.

நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த நெடுமாறன் ராஜாங்கம் ஏழை எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய குறைந்த செலவில் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியே ‘சூரரைப் போற்று’. அந்த முயற்சியில் பலமுறை தோல்வியுற்றாலும் சோர்ந்துவிடாத மாறா, தனக்கான லட்சியத்தில் இறுதிவரை போராடி ஜெயிப்பார். தீபாவளிக்கு வெளியான படங்களில் ‘சூரரைப் போற்று’வை அனைவரும் போற்றிக்கொண்டாட இதுவே முக்கிய காரணம்.

இந்நிலையில், பெங்களூருவில் வசிக்கும் சூர்யாவின் ரசிகரான கார்த்தி என்பவர் தனது குழந்தைக்கு ‘மாறா’ கதாபாத்திரம் போலவே வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதற்காக ‘மாறா’ என்று பெயரிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சூர்யா ரசிகர் மன்றத்தினர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!