தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இது எளிய மக்களின் கதையை விவரிக்கும் படைப்பு'

2 mins read
32bdd05e-d82a-471b-803e-168360996ff2
'என்றாவது ஒரு நாள்' படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன். படம்: தமிழக ஊடகம் -

உண்­மைச் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாக உரு­வாகி உள்­ளது 'என்­றா­வது ஒரு ­நாள்'. வெற்றி துரை­சாமி இயக்­கத்­தில் விதார்த், ரம்யா நம்­பீ­சன் நாய­கன், நாய­கி­யாக நடித்­துள்­ள­னர்.

கால்­நடை வளர்ப்பு மற்­றும் உல­க­ம­ய­மாக்­கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றி விவ­ரித்­துள்­ள­ன­ராம்.

குடி­நீர் பஞ்­சம், குழந்தை தொழி­லா­ளர்­கள், நல்ல எதிர்­கா­லத்­துக்­காக காத்­தி­ருக்­கும் மக்­க­ளின் சவால்­களை எல்­லாம் காட்­சி­க­ளாக்கி, மக்­களை சிந்­திக்க தூண்­டும் வகை­யில் திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­கி­றார் இயக்­கு­நர் வெற்றி துரை­சாமி.

இவர் சென்னை மாந­கர முன்­னாள் மேயர் சைதை துரை­சா­மி­யின் மகன். இது இவ­ருக்கு முதல் படம். எளிய மக்­களும் கால்­ந­டை­க­ளு­ட­னான அவர்­க­ளின் உற­வும் கதை­யில் முக்­கிய பகு­தி­யாக வைக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

"நல்ல கதை­களை தேர்வு செய்து நடிக்­கும் விதார்த், வித்­தி­யா­ச­மான கதை­களில் மட்­டுமே நடிக்­கும் ரம்யா நம்­பீ­சன், 'சேது­பதி' படத்­தில் நடித்த ராக­வன் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கி­றார்­கள். தி தியேட்­டர் பீப்­பிள் என்ற பட நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது.

"என்.ஆர்.ரகு­நந்­தன் இசை­ய­மைக்­கி­றார். அனைத்து பாடல்­க­ளை­யும் கவி­ஞர் வைர­முத்து எழு­தி­யி­ருக்­கி­றார்," என்­கி­றார் வெற்றி.

நாளி­த­ழில் வரும் செய்­தி­களை படித்து விட்டு எளி­தில் கடந்­து­வி­டு­வோம். அப்­படி நாம் கடந்த உண்மை சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில், 'என்­றா­வது ஒரு­நாள்' படத்­தின் கதை உரு­வாக்­கப்­பட்­டது என்­றும் கூறு­கி­றார்.

"உண்­மைச் சம்­ப­வத்தை கரு­வாக வைத்து வரும் கதை­கள், ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்பை பெற்று வரு­கின்­றன. நிஜ சம்­ப­வங்­களை திரைக்­கதை என்­னும் மாலை­யாக அழ­காக கோர்த்து பல்­வேறு இயக்­கு­னர்­கள் கதை­களை சொல்­லும் விதம் அதி­க­மாகி வரு­கிறது," என்­கி­றார் வெற்றி.