‘கவலைகளை மறந்தேன்’

கடந்த ஒரு மாத­மாக குக்­கி­ரா­மம் ஒன்­றில் தங்­கிப் பொழு­தைக் கழித்­துள்­ளார் நடிகை ஓவியா.

வெள்­ளந்­தி­யான கிராம மக்­க­ளு­டன் பழ­கி­யது மன­துக்கு நிம்­ம­தியை அளித்­த­து­டன் தன் கவ­லை­க­ளை­யும் மறக்­கச் செய்­த­தாகக் குறிப்­பி­டு­கி­றார்.

கொரோனா ஊர­டங்கு பல­ரை­யும் புலம்­ப­வைத்­துள்­ளது. ஆனால் ஓவி­யாவோ தமக்கு அத­னால் நன்­மை­தான் விளைந்­தது என்­கி­றார்.

ஊர­டங்­கின்­போது சொந்த ஊரான கேர­ளா­வுக்­குச் சென்­று­விட்­டா­ராம். அங்கு தனது தந்­தை­யு­டன் தங்­கி­யி­ருந்து அவ­ருக்­குத் தேவை­யா­ன­தைச் செய்­து­கொ­டுத்து அன்­பா­கக் கவ­னித்­துக் கொண்­டா­ராம்.

“அப்­பா­வு­டன் நிறைய பேசி­னேன். கூடவே நான் செல்­ல­மாக வளர்க்­கும் நாய்க்­குட்­டி­யை­யும் கொஞ்சி மகிழ்ந்­தேன். கேரளா போர­டித்­த­தும் இடத்தை மாற்­றிக்­கொண்­டேன். அப்­போ­து­தான் நகர்ப்­புற ஆர­வா­ர­மற்ற, வச­தி­கள் அதி­க­மில்­லாத ஓரி­டத்­தில் தங்­க­வேண்­டும் என்று முடிவு செய்­தேன்.

“கொடைக்­கா­ன­லில் நான் தங்­கி­யி­ருந்த கிரா­மம் பார்க்க ரம்­மி­ய­மாக இருக்­கும். அங்­குள்ள மக்­களும் பாசத்­தோடு பழ­கி­னார்­கள். கைபேசி சிக்­னல் கூட கிடைக்­காத பகுதி. வசதி இல்லை என்­றா­லும் மக்­க­ளோடு மக்­க­ளா­கப் பழ­கி­ய­தால் எது­வும் பெரி­தா­கத் தெரி­ய­வில்லை. அந்­த­ள­வுக்­குப் பாசம் காட்­டு­கிறார்­கள்.

“சுருக்­க­மா­கச் சொன்­னால் நான் ஒரு நடிகை என்­ப­தையே மறந்­து­போ­னேன். மீண்­டும் என்­னைப் புதுப்­பித்­துக் கொண்­ட­தா­கத் தோன்­று­கிறது,” என்று சொல்­லும் ஓவியா தற்­போது ஒரு சுற்று இளைத்­தி­ருக்­கி­றார்.

முன்­பெல்­லாம் உண­வுக் கட்­டுப்­பாடு இல்­லா­மல் சாப்­பி­டு­வா­ராம். மொறு­மொறு நெய் தோசை என்­றால் ஒரு பிடி பிடிப்­பா­ராம். அண்­மைக்­கா­ல­மாக சற்றே உண­வுக் கட்­டுப்­பாட்­டு­டன் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“இப்­போது யோகா­ச­னத்­தில் கவ­னம் செலுத்­து­கி­றேன். வழக்­க­மான உடற்­ப­யிற்­சி­யி­லும் ஈடு­ப­டு­கி­றேன். ஒரு­வேளை இது­தான் உடல் இளைக்க கார­ண­மாக இருக்­கக்­கூடும். எப்­ப­டியோ ஆரோக்­கி­ய­மாக இருந்­தால் நல்­லது­தானே,” என்று சொல்­லிச் சிரிப்­ப­வர், தன் உட­லில் மேலும் ஓரி­டத்­தில் பச்சை குத்­தி­யுள்­ளார்.

தமது இடது கால் மணிக்­கட்டை ஒரு பாம்பு சுற்­றி­யி­ருப்­பது போல் காட்சி தரும் ‘டாட்டூ’வை வரைந்­து­கொள்ள மிக­வும் சிரமப்­பட்­டா­ராம்.

“எலும்­பு­கள் அதி­க­முள்ள பகு­தி­யில் பச்சை குத்­திக்­கொண்­டால் வலி எடுக்­கும். அவ்­வளவு சுல­ப­மாக வரையமுடி­யாது. அத­னால்­தான் பல­ரும் சதைப்­பி­டிப்­புள்ள இடத்­தில் பச்சை குத்­து­வார்­கள். ஆனால், வலி ஏற்­பட்­டா­லும் பர­வா­யில்லை என்ற முடி­வோடு பாம்பு உரு­வத்­தைப் பச்சை குத்­திக்கொண்­டேன்.

“வாழ்க்­கை­யில் நான் சந்­தித்த, இனி சந்­திக்­கப் போகும் வலி­களை விட இது ஒன்­றும் பெரிய வலி அல்ல என்ற எண்­ணம் ஏற்­பட்­டது. என்­னைப் பொறுத்­த­வரை இது ஒரு­வ­கை­யில் மனோதத்­துவ சிகிச்சை போன்­ற­து­தான். பயத்­தைக் கடக்­கும்­போது மன­தில் தன்­னம்­பிக்கை உண்­டா­கும். அதற்கு பயத்தை நாம் நேர­டி­யாக எதிர்­கொள்ள வேண்­டும்,” என்­கி­றார் ஓவியா.

சமூக வலைத்­த­ளங்­களில் ‘ஓவி­யா­வின் ரசி­கர் படை’ இன்­ற­ள­வும் விறு­வி­றுப்­பா­கச் செயல்­பட்டு வரு­கிறது. ரசி­கர்­க­ளின் அன்­புக்கு முன்­னால் தனக்கு எது­வுமே பெரி­தல்ல என்று இவ­ரும் பாசம் காட்­டு­கி­றார்.

“ரசி­கர்­க­ளுக்கு அறி­வுரை ஏதும் சொல்ல விரும்­ப­வில்லை. ஆனால், யதார்த்­தத்­துக்கு ஒத்­து­வ­ராத கன­வு­க­ளைக் கண்டு அது­போல் எல்­லாம் கிடைக்­க­வேண்­டும் என்று நினைத்து நேரத்தை வீண­டிக்­கா­தீர்­கள்.

நிகழ்­கா­லத்­தைக் கொண்­டா­டுங்­கள். நீங்­கள் எதிர்­கொள்­ளும் ஒவ்­வொரு நாளை­யும் அர்த்­த­முள்­ள­தாக்­குங்­கள். அதன்­மூ­லம் மகிழ்ச்­சி­யாக வாழுங்­கள்,” என்று அக்­க­றை­யு­டன் அறி­வு­றுத்­து­கி­றார் ஓவியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!