‘பெருமையாக கருதுகிறேன்’

‘சூர­ரைப் போற்று’ படத்­தின் வசூல் குறித்து இது­வரை அதி­கா­ர­பூர்வ தக­வல் ஏதும் வர­வில்லை. எனி­னும் விமர்­சன ரீதி­யில் கிடைத்­தி­ருக்­கும் வர­வேற்பு அப்­ப­டக்­கு­ழு­வி­னரை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

அதி­லும் படத்­தின் நாயகி அபர்ணா பால­மு­ரளி இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யில் உள்­ளார்.

“நான் ஏற்று நடித்த பொம்மி கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­கள் மன­தில் ஆழ­மா­கப் பதிந்து விட்­டது. எனது நடிப்பு சூர்யா சாருக்கு இணை­யாக இருந்­த­தாக பல­ரும் பாராட்­டு­வ­தைக் கேட்­கும்­போது பெரு­மை­யாக உணர்­கி­றேன்.

“இது­தான் நான் முதன்­மு­றை­யாக எனது கதா­பாத்­தி­ரத்­துக்­குப் பின்­னணி பேசிய படம். மேலும் மதுரை பெண்­ணாக, வட்­டார மொழி­யில் நான் பேசி­யி­ருப்­ப­தற்­கும் பாராட்­டு­கள் கிடைக்­கின்­றன,” என்று முகம் நிறைந்த சிரிப்­பு­டன் பேசு­கி­றார் அபர்ணா.

‘இப்ப போனாத்­தான் என்­ன­வாம்...’ என்­ப­து­தான் இவர் தமி­ழில் பின்­னணி பேசிய முதல் வச­னம். படங்­களில் நடித்­த­ப­டியே கர்­நா­டக சங்­கீ­த­மும் கற்று வரு­கி­றார். தமி­ழில் வெளி­யான ‘8 தோட்­டாக்­கள்’ படம் தவிர, மலை­யா­ளத்­தி­லும் சில பாடல்­க­ளைப் பாடி­யுள்­ளார் அபர்ணா. படப்­பி­டிப்­புக்கு மத்­தி­யில் ஒரு­முறை கூட இசை வகுப்­பில் பங்­கேற்­கா­மல் இருந்­த­தில்­லை­யாம்.

தனது உடல் பரு­மன் குறித்து சிலர் விமர்­சிப்­ப­தைத் தாம் அறிந்­தி­ருப்­ப­தா­க­வும் அவை குறித்­துத் தாம் கவ­லைப்­ப­டு­வ­தில்லை என்­றும் சொல்­கி­றார் அபர்ணா. உடல் பெருத்­தி­ருந்­தால் நாய­கி­யாக நடிக்­கக்­கூ­டாது என ஏதே­னும் விதி­முறை உள்­ளதா? அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளால் சிறப்­பான நடிப்பை வழங்க முடி­யாதா? என்­றும் கேள்வி எழுப்­பு­கி­றார்.

“பனி­ரண்­டாம் வகுப்பு படிக்­கும்­போது மாதாந்­தி­ரத் தேர்­வில் வேதி­யி­யல் பாடத்­தில் நான் தேர்ச்சி பெற­வில்லை. வாழ்க்­கை­யில் எனது முதல் தோல்வி என்­றால் அது­தான். அந்­தத் தோல்­வியை என்­னால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. ஆசி­ரி­யை­கள் என்­னைச் சமா­தா­னப்­ப­டுத்தி மீண்­டும் அக்­க­றை­யு­டன் பாடம் எடுத்து அடுத்த தேர்­வில் நிறைய மதிப்­பெண்­கள் எடுக்க வைத்­த­னர்.

“அதன் பிறகு கணக்­கும் அறி­வி­ய­லும் எனக்­குப் பிடித்­த­மான பாடங்­க­ளாக மாறி­யது தனிக் கதை. தனி மனி­த­னின் வெற்றி தோல்வி குறித்த ‘சூர­ரைப் போற்று’ அனை­வ­ருக்­கும் ஏற்ற பட­மா­க­வும் தங்­கள் வாழ்க்­கை­யு­டன் பொருத்­திப் பார்க்­கக்­கூ­டிய பட­மா­க­வும் உள்­ளது. அதுவே படத்­தின் வெற்­றிக்­குக் கார­ணம்,” என்­கி­றார் அபர்ணா.

இது­வரை தமக்­குக் காதல் அனு­ப­வம் ஏற்­பட்­ட­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், காதல் குறித்­துப் பெரிய எதிர்­பார்ப்­பு­கள் ஏது­மில்லை என்­கி­றார். சிறு வய­தில் மலை­யாள நடி­கர் குஞ்­சாகோ போபன் மீது மட்­டும் ஒரு­வித ஈர்ப்பு இருந்­த­தாம்.

“இரண்­டாம் வகுப்பு படித்­துக்கொண்­டி­ருந்­த­போது பர­த­நாட்­டி­யத்­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­தி­னேன். அதன் பல­னாக பள்­ளிக்­கூட அள­வி­லான பர­த­நாட்­டி­யப் போட்­டி­யில் கலந்­து­கொண்டு பரிசு பெற்­றேன். அதற்­காக பல­ரும் என்­னைப் பாராட்­டி­னர். வாழ்க்­கை­யில் பெற்ற முதல் வெற்றி என்று அதைக் குறிப்­பி­ட­லாம்.

“வெற்றி தோல்வி குறித்து கவ­லைப்­ப­டா­மல் நம் முயற்­சி­யைத் தொட­ர­வேண்­டும் என்­பது முக்­கி­யம். என்­றா­வது ஒரு­நாள் வெற்றி நம் பக்­கம் திரும்­பும் என்­பதே ரசி­கர்­க­ளுக்­குச் சொல்ல விரும்­பும் தக­வல்,” என்­கி­றார் அபர்ணா.

‘சூர­ரைப் போற்று’ படத்­தில் இவ­ரது நடிப்பு சிறப்­பாக இருந்­த­தாக ஜோதி­கா­வும் பாராட்­டுத் தெரி­வித்­தா­ராம். அவ்­வ­ளவு பெரிய நடிகை தம்­மைப் பாராட்­டி­யது மகிழ்ச்­சியை அதி­கப்­ப­டுத்தி உள்­ள­தாக குறிப்­பி­டு­கி­றார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் இந்­தாண்டு வெளி­யான திரைப்­ப­டங்­களில் சிறந்த படம் என்று ‘சூர­ரைப் போற்று’ படத்தை சூர்­யா­வின் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பாராட்டி வரு­கி­றார்­கள்.

‘இந்­தி­யா­வின் பெருமை’ என்று குறிப்­பிட்டு ரசி­கர்­கள் பகிர்ந்­து­வ­ரும் பதிவு இந்­திய அள­வில் சமூக வலைத்­த­ளங்­களில் ‘டிரெண்­டிங்’ ஆகி ­வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!