சீனு ராமசாமியின் புகழாரம்

3 mins read
233a4acb-5877-44da-8c6b-a99655b0060a
படம்: தமிழக ஊடகம் -

தெலுங்குத் திரைப்­ப­ட­மான 'ஆலா வைகுண்­ட­பு­ரம்லோ' என்ற படத்­தின் மறு­ப­திப்­பில் அல்லு அர்­ஜுன் நடித்த வேடத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் தமிழில் நடிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தற்­பொ­ழுது 'டாக்­டர்' மற்­றும் 'அய­லான்' படங்­களில் நடித்­துக்­கொண்டு இருக்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன். இவரை இயக்­கு­நர் சீனு ராம­சாமி கிரிக்­கெட் வீரர் தோனி­யைப் போலவே நீங்­களும் உழைப்­பால் முன்­னுக்கு வந்­த­வர் என்று பாராட்டி இருக்­கி­றார்.

'கோலாமாவு கோகி­லா'வை இயக்­கிய இயக்­கு­நர் நெல்­சன்­தான் 'டாக்­டர்' படத்­தை­யும் இயக்­கு­கி­றார். 'டாக்­டர்' படத்­தில் ஒரு பாடல் காட்­சி­யைத் தவிர மற்ற காட்­சி­கள் அனைத்­தும் எடுத்து முடித்­தா­கி­விட்­டது என்று கூறு­கின்­ற­னர் படக்­கு­ழு­வி­னர். இந்­தப் படத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு ஜோடி­யாக ப்ரி­யங்கா அருள் நாய­கி­யாக நடிக்­கி­றார். இது அவ­ருக்கு முதல் தமிழ்ப்­ப­டம்.

மேலும் வினய், யோகி பாபு உள்­ளிட்­டோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர். இப்­ப­டம் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் நடந்த மனித உறுப்பு கடத்­தலை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது என்று கூறப்­ப­டு­கிறது. கிறிஸ்­மஸ் விடு­மு­றை­யில் திரையரங்கில் இந்தப் படத்தை வெளி­யிடத் திட்ட மிட்டிருக்கின்றனர்.

இந்­தப் படத்­தைத் தொடர்ந்து சிவ­கார்த்­தி­கே­யன் நடிக்­கும் படம் 'அய­லான்'. இந்­தப் படத்­தில் இவ­ருக்கு ஜோடி­யாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்­கிறா்.

இது அறி­வி­யல் புனை­கதை என்று கூறப்­ப­டு­கிறது. இந்த படத்­தில் சிவா மூன்று வேடங்­களில் நடிப்­பார் என்­றும் ரகுல் ஒரு வானி­ய­லா­ள­ரா­க நடிக்கிறார் என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இஷா கோப்­பி­க­ரைத் தமிழ் திரை­யு­ல­கில் நீண்ட இடை­வெ­ளிக்கு பிறகு மீண்­டும் இந்­தப் படத்­தில் காண­லாம்.

இயக்­கு­நர் ரவிக்­கு­மார் இயக்­கும் 'அய­லான்' '24AM ஸ்டு­டி­யோ­'சால் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. ஆஸ்­கார் விருது பெற்ற இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர்.ரஹ்­மான் இந்த படத்­திற்கு இசை­ய­மைக்­கி­றார்.

எந்­த­வொரு ஊதி­யத்­தை­யும் ஏற்­றுக்கொள்­ளா­மல் இந்த படத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் பணி­யாற்றி வரு­வ­தாக நம்பத்தகுந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த இரண்டு படங்­க­ளுக்­குப் பிறகு சிவ­கார்த்­தி­கே­யன் தெலுங்­குப் படத்­தின் மறு­ப­திப்­பில் நடிக்க இருக்­கி­றார்.

தெலுங்கு பதிப்­பில் அல்லு அர்­ஜு­னுக்கு ஜோடி­யாக பூஜா ஹெக்டே நடித்­தி­ருந்­தார். மூத்த நடி­கர் ஜெய­ராம் அல்லு அர்­ஜு­னின் தந்­தை­யா­க­வும் சத்­ய­ராஜ் அவ­ரது தாத்­தா­வா­க­வும் நடித்­தி­ருந்­த­னர்.

'ஆலா வைகுண்­ட­பு­ரம்லோ' தெலுங்கு பேசும் மாநி­லங்­களில் மட்­டு­மல்ல, கேர­ளா­வி­லும் வெற்றி பெற்­றது. இந்­தப் படத்­தின் தமிழ் மறுபதிப்பில்தான் சிவ­கார்த்­தி­கே­யன் அல்லு அர்­ஜுனின் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டை­யில் சிவ­கார்த்­தி­கே­ய­னின் தயா­ரிப்­பில் வெளி­யான 'கனா' படம் இந்­தி­யில் மறு­ப­திப்­பாக இருக்­கிறது.

இந்­தப் படத்­தில் கிரிக்­கெட் ஆடும் பெண்­க­ளுக்கு பயிற்­சி­யா­ள­ராக நடித்­தி­ருந்­தார் சிவ­கார்த்­தி­கே­யன். இந்­தி­யி­லும் இவ­ரு­டைய வேடத்தை இவரே செய்ய இருக்­கி­றார். அதன்மூலம் இந்­தி­யி­லும் கால்­ப­திக்­கி­றார் சிவா.

கிரிக்­கெட் வீரர் எம்.எஸ். தோனி அனைத்­து­லக போட்­டி­களில் இருந்து வில­கு­வ­தாக அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தார்.

அதற்கு தன்­னு­டைய டுவிட்­ட­ரில் "எங்­களை அதி­க­பட்­சம் ஊக்­கு­வித்­த­தற்­கும் பொழு­து­போக்கைச் சிறப்­பா­கக் கொடுத்­த­தற்­கும் நன்றி. நீங்­கள் என்­றுமே ஓர் அற்­பு­த­மான தலை­வர் தோனி. எங்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்த உங்­க­ளி­டம் வெவ்­வேறு திட்­டங்­கள் இருக்­கும் என்­பது எனக்கு உறு­தி­யா­கத் தெரி­யும். வாழ்த்­து­கள்," என்று பதிவிட்டிருந்தார்.

சிவ­கார்த்­தி­கே­ய­னின் இந்த டுவிட்­டைக் குறிப்­பிட்டு இயக்­கு­நர் சீனு ராமா­சாமி "சின்­னத்­தி­ரை­யில் ஆரம்­பித்து பெரிய திரை­யில் நட்­சத்­தி­ர­மாக ஆன நீங்­களும் அதிக ஊக்­க­மும் பொழு­து­போக்­கும் தந்­த­வர் சிவ­கார்த்­தி­கே­யன்.

"தோனி­யைப் போலவே உங்­கள் களத்­தில் பெரும்­பா­லும் புதி­ய­வர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் வாய்ப்பு தந்­தீர்­கள். அடி­மட்­டத்­தி­லி­ருந்து வந்த நீங்­கள் இரு­வ­ரும் வெற்றி பெற்­றவர்கள்தான்," என்று பதிவிட்டிருந்தார்.

விஜய் சேதுபதிக்கு பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த சீனு ராமசாமியின் இந்த டுவீட் சிவ­கார்த்­தி­கே­யன் ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்­பைப் பெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்