நாயகியின் குமுறல்

நாயகியின் குமுறல்

1 mins read
2908ca1c-74b5-47ce-a0a5-ef71dbb8ba12
-
Google News Preferred Icon

நடிகை ஆத்மிகா 'மீசைய முறுக்கு' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருக்கிறது. தற்போது 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் நடித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆத்மிகா தற்போது சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ள கேள்வி ஒன்று பேசுபொருளாகியுள்ளது. "ஏன் அனைத்துப் படங்களின் சுவரொட்டிகளிலும் கதாநாயகி களின் பெயர்கள் இடம் பெறுவதில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"அண்மையில் 'ரவுடி பேபி' பாடல் ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்றதையடுத்து அப்படக்குழுவினர் தனுஷ் கையில் கித்தார் வைத்திருக்கும் சுவரொட்டியை வெளி யாக்கியிருந்தனர். அதில் சாய் பல்லவியின் பெயர்கூட இடம்பெறவில்லை. அந்தப் பாடல் சாய் பல்லவியால்தான் வெற்றி பெற்றது. அப்படி இருக்கும்போது அவரின் படத்தைப் போடாமல் தனுஷை மட்டும் சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருந்தனர். இவற்றை நினைக்கும்போது வருத்தமாக இருக் கிறது," என்று கூறியுள்ளார்.

அதற்கு 'பெண்களை மையமாக வைத்துப் பல படங்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன ஆத்மிகா. கவலைப்படாதீர்கள்," என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்