'ஓடிடி'யில் 'மாஸ்டர்'?

'ஓடிடி'யில் 'மாஸ்டர்'?

1 mins read
23b8792d-fdb3-4aef-a31b-ee9a82fb75a5
படம்: தமிழகம் ஊடகம் -

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் விஜய், விஜய் சேது­பதி நடித்­தி­ருக்­கும் படம் 'மாஸ்­டர்'.

இந்­தப் படம் வெளி­யா­கும் நாளுக்­காக இந்த இரண்டு உச்ச நடி­கர்­க­ளின் ரசி­கர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் திரை­ய­ரங்­கு­கள் திறந்­தா­லும் 50 விழுக்­காட்டு இருக்­கை­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கி­யுள்­ளது தமி­ழக அரசு. அத­னால் பெரிய படங்­கள் ஏதும் தீபா­வ­ளிக்கு திரை­ய­ரங்­கி­ல் திரை­யி­டப்­ப­ட­வில்லை.

பொங்­க­லுக்­குள் கொரோனா பாதிப்பு குறைந்து திரை­ய­ரங்­கு­களில் 100 விழுக்­காட்டு ரசி­கர்­க­ளு­டன் படத்தை வெளி­யி­ட­லாம் என்று காத்­தி­ருந்­த­னர் படக்குழுவினர்.

ஆனால், கொரோனா நாளுக்கு நாள் அதி­க­ரிப்­ப­தால் திரை­ய­ரங்­கி­ல் வெளி­யி­டும் எண்­ணத்தை மாற்­றிக்­கொண்டு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதனைப் பயன்படுத்தி 'நெட்­ஃபி­ளிக்ஸ் ஓடிடி' பெரும் தொகை கொடுத்து 'மாஸ்டர்' படத்தை வாங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்பட்ட நிலையில், மாஸ்டர் படக்குழு, அவ்வாறு எந்த நிறுவனத்துடனம் ஒப்பந்தம் போடப்படவில்லை என்றும் திரையரங்குகளில்தான் படம் திரையிடப்படும் என்றும் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

எனவே, ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியதுதான்!

குறிப்புச் சொற்கள்