திரிஷா தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடிக்க இருக்கிறார். அதற்காக இவர் குதிரைப் பயிற்சி செய்து சான்றிதழ் பெற்றிருந்தார்.
மலையாளத்தில் 'ராம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'பிக்கு' படத்தின் மறுபதிப்பில் நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார்.
இந்தியில் இயக்குநர் சுர்ஜித் சர்க்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சன் தீபிகா படுகோன், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் 'பிக்கு' திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மறுபதிப்பு உரிமத்தை வாங்கி யுள்ளதால், பாலிவுட்டில் தீபிகா படுகோன் ஏற்ற நடித்த கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.
மேலும் அமிதாப்பச்சனுக்கு பதிலாக தமிழில் முன்னணி நடிகர் ஒருவரை இப்படத்தில் நடிக்க வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

