சுடச் சுடச் செய்திகள்

‘நயனை பின்பற்றுவேன்’

‘மூக்­குத்தி அம்­மன்’ படத்­தின் வெற்றி அதில் நடித்த அனை­வ­ருக்­குமே நல்ல பாராட்­டு­க­ளை­யும் புது வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­றுத் தந்­துள்­ளது. அந்த வகை­யில் ஸ்மி­ருதி வெங்­கட் உற்­சா­கத்­தில் இருக்­கி­றார்.

அப்­ப­டத்­தில் நாய­கன் ஆர்.ஜே. பாலா­ஜி­யின் தங்­கை­யா­க­வும் குடும்­பத்­துக்­காக தியா­கம் செய்­யும் பொறுப்­புள்ள பெண்­ணா­க­வும் நடித்­தி­ருந்­தார் இவர்.

இந்­நி­லை­யில் நயன்­தாரா, ஊர்­வசி போன்ற அனு­பவ நடி­கை­க­ளு­டன் இணைந்து நடித்­தது தமக்­குப் பல­வ­கை­யி­லும் பய­னுள்­ள­தாக அமைந்­தது என்­கி­றார் ஸ்மி­ருதி வெங்­கட்.

கடந்த ஆண்டு வெளி­யான ‘தடம்’ படத்­தில் இவ­ரும் ஒரு நாயகி.

அதன்­பின்­னர் தனி நாய­கி­யாக நடிக்­க­வேண்­டும் என விரும்­பிய நிலை­யில் ஆர்.ஜே. பாலா­ஜி­யைச் சந்­தித்­தா­ராம்.

‘மூக்­குத்தி அம்­மன்’ படத்­தின் கதை­யை­யும் தனக்­கான கதா­பாத்­தி­ரம் குறித்­தும் அறிந்­த­வு­டன் வெகு­வாக ஈர்க்­கப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

“தெய்­வா­மிர்­தம் கதா­பாத்­தி­ரத்தை நான் வெகு­வாக ரசித்­தேன். நல்ல மன உறு­தி­யுள்ள அன்­பான, அக்­க­றை­யுள்ள பெண். அத­னால் அந்­தக் கதா­பாத்­தி­ரத்­து­டன் என்­னைப் பொருத்­திக்­கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் இயல்­பா­கவே ஏற்­பட்­டது.

“நான் மட்­டு­மல்ல, எந்­த­வொரு பெண்­ணும் தெய்­வா­மிர்­த­மாக இருக்­கவே விரும்­பு­வாள். இதில் என்­னால் சிறப்­பான நடிப்பை வெளிப்­படுத்த முடி­யும் என உறு­தி­யாக நம்­பி­னேன். மேலும் வளர்ந்­து­வ­ரும் நடி­கை­யான எனக்கு மிகப்­பெ­ரிய படக்­கு­ழு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது நல்ல அனு­ப­வ­மா­க­வும் அமைந்­தது,” என்று இப்­ப­டத்­தில் நடித்­த­தற்­கான கார­ணங்­களை விவ­ரிக்­கி­றார் ஸ்மி­ருதி வெங்­கட்.

‘மூக்­குத்தி அம்­மன்’ படம் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் மீண்­டும் பக்­திப் படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என நம்­பு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், பெண்­களை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­கள் அதி­க­ரிப்­பது திரை­யு­ல­கத்­தின் வளர்ச்­சிக்கு நன்மை பயக்­கும் என்­கி­றார்.

“நயன்­தாரா எதைச் செய்­தா­லும் அது ரசி­கர்­களை ஈர்க்­கும். அந்­த­ளவு மிக நேர்த்­தி­யான நடிகை. அவ­ரது உடை, சிகை­ய­லங்­கா­ரம், உடல் மொழி, கேமரா முன்­னால் அவர் நடிக்­கும் விதம் என எல்­லாமே மிகக் கச்­சி­த­மாக இருக்­கும். தனக்கு ஏற்ற கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே அவர் தேர்வு செய்­கி­றார். இவை எதி­லும் அவர் எந்­த­வி­தக் குறை­யும் வைப்­ப­தில்லை.

“அனைத்­தை­யும் மீறி நேரம் தவ­றாமை என்பது­தான் அவ­ரி­டம் எனக்கு மிக­வும் பிடித்­த­மான விஷ­யம். படப்­பி­டிப்­புக்கு வந்­து­விட்­டால் வீணாக ஏதும் பேச­மாட்­டார், ஒரு நிமி­டத்­தைக் கூட­வீ­ண­டிக்க மாட்­டார். இது­போன்ற விஷ­யங்­களில் அவ­ரைப் பின்­பற்ற விரும்­பு­கி­றேன்.

“படப்­பி­டிப்­பில் கல­க­லப்­பா­கப் பேசிக் கொண்­டி­ருக்­கும் நய­னும் ஊர்­வ­சி­யும், கேமரா இயங்­கத் தொடங்­கி­ய­தும் சட்­டென சீரி­ய­ஸாக நடிக்­கத் தொடங்கி விடு­வார்­கள். அத­னால் நாமும் உட­ன­டி­யாக காட்­சிக்­குள் செல்ல வேண்­டி­யி­ருக்­கும்.

“இரு­வ­ரது திற­மை­யை­யும் நேரில் கண்டு வியந்து போனேன். அதி­லும் ஊர்­வசி நம்­மு­டன் சிரிக்­கச் சிரிக்­கப் பேசி­விட்டு அடுத்த நிமி­டமே தனக்­கான காட்­சி­யில் அழுது புலம்பி நடிப்­பது அவ­ரது அனு­ப­வத்­தை­யும் திற­மை­யை­யும் வெளிக்­காட்­டு­வ­தாக இருந்­தது,” என்று சொல்­லும் ஸ்மி­ருதி வெங்­கட், அடுத்து சத்­ய­ரா­ஜு­டன் ‘தீர்ப்­பு­கள் விற்­கப்­படும்’ என்ற படத்­தில் நடிக்­கி­றார்.

நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களிலும் நடிப்பாராம்.

“முன்னணி நடிகரான பிறகும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றங்களில் நடிக்க தயங்குவதே இல்லை. பிறகு வளரும் நடிகையான நான் ஏன் தயங்க வேண்டும்?” என்று கேட்கிறார் ஸ்மிருதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon