'விரசம் இன்றிச் சொல்கிறோம்'

1 mins read
267de4f3-c42f-41aa-8d6b-d57098d65bae
படம்: தமிழக ஊடகம் -

சாந்­தனு, அதுல்யா நடிப்­பில் உரு­வா­கும் படம் 'முருங்­கைக்­காய் சிப்ஸ்'. ஸ்ரீஜர் இயக்­கு­கி­றார்.

இது நகைச்­சு­வை­யும் காத­லும் கலந்த பட­மாக உரு­வா­கிறது. கே. பாக்­ய­ராஜ் சிறப்­புத் தோற்­றத்­தில் நடிக்­கி­றா­ராம்.

மேலும் மனோ­பாலா, ஆனந்­த்­ராஜ், மயில்­சாமி, மொட்ட ராஜேந்­தி­ரன், யோகி­பாபு, மது­மிதா, ரேஷ்மா உள்­ளிட்ட பலர் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"புது­ம­ணத் தம்­ப­தி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் முத­லி­ரவு என்­பது மகிழ்ச்சி­யான பாரம்­ப­ரி­ய­மான நிகழ்­வா­கும். அப்போது நடை­பெ­றும் சடங்­கு­களை நகைச்­சு­வை­யா­க­வும் சற்­றும் விர­ச­மில்­லா­ம­லும் காட்­சிப்­ப­டுத்தி இருக்­கி­றோம்," என்­கி­றார் இயக்­கு­நர் ஸ்ரீஜர்.