இரவு விருந்துக்குச் செல்லாததால் படப்பிடிப்புக்குத் தடை?

பாலி­வுட்­டில் முன்­னணி நடி­கை­யான வித்யா பாலன் தற்­போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மத்­திய பிர­தேச மாநி­லம் பால்­காட் மாவட்­டத்­தில் உள்ள வனப்­ப­கு­தி­யில் நடை­பெற்று வரு­கிறது. இந்த படப்­பி­டிப்­பில் கலந்துகொள்­வ­தற்­காக நடிகை வித்யா பாலன் கடந்த வாரம் அங்கு சென்­றி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், மத்­திய பிர­தேச மாநில வனத்­துறை அமைச்­சர் விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்­துக்கு அழைத்­த­தாக கூறப்­ப­டு­கிறது. ஆனால் வித்யா பாலன் செல்ல மறுத்­து­விட்­டார்.

இதை­ய­டுத்து வனப்­ப­கு­தி­யில் படப்­பி­டிப்­புக்குச் சென்ற படக்­கு­ழு­வி­ன­ரின் வாக­னங்­களை பால்­காட் வனத்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர். 2 வாக­னங்­கள் மட்­டுமே வனப்­ப­கு­திக்­குள் செல்ல அனு­ம­தித்­த­னர். இத­னால் படக்­கு­ழு­வி­ன­ரால் வனப்­ப­கு­திக்­குள் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து அங்கு நடை­பெற இருந்த படப்­பி­டிப்பு ரத்து செய்­யப்­பட்­டது.

நடிகை வித்யா பாலன் அமைச்­ச­ரின் இரவு விருந்­துக்குச் செல்ல மறுத்­த­தால்­தான் படப்­பி­டிப்­புக்குத் தடை விதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

ஆனால், அமைச்­சர் விஜய் ஷா, “அவர்­கள்­தான் என்னை இரவு விருந்­துக்கு அழைத்தார்கள். நான் படப்­பி­டிப்பை நிறுத்­தச் சொல்­லி உத்­த­ர­வி­ட­வில்லை,” என்று மறுப்­புத் தெரி­வித்து இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!