பொங்கல் பண்டிகைக்குப் பின் வெளியாகும் 'கோப்ரா'

பொங்கல் பண்டிகைக்குப் பின் வெளியாகும் 'கோப்ரா'

1 mins read
833f33df-01a5-4aa9-b5d1-2ad56477c6e5
படம்: தமிழக ஊடகம் -

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் 'கோப்ரா'. ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாகி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

கொரோனா ஊரடங்கின்போது வெளியான இப்படத்தின் 'தும்பி துள்ளல்' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் ஏழு வெவ்வேறு வித்தியா சமான தோற்றங்களில் நடித்துள்ளார் விக்ரம்.

குறிப்பாக நீருக்கடியில் இருந்தபடி சண்டையிடும் காட்சியில் உயிரைப் பணயம் வைத்து நடித்த தாகவும் இந்த அர்ப்பணிப்புக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் இப்படக் குழுவினர் அவரைப் பாராட்டுகிறார்கள்.

அநேகமாக அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 'கோப்ரா' திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.