சிங்கப்பூர்-மலேசிய மக்களுக்கான 'ஜீ-தமிழ்' குறும்படப் போட்டி

1 mins read
e11ac79f-8445-44af-8f86-0e36f9e1e83d
-

நீங்கள் அதிக கற்பனைத்திறன் படைத்தவரா? திரைப்படங்கள் பார்க்கவும், விமர்சிக்கவும் பிடிக்குமா? இந்த கதையை இப்படி எடுத்திருக்கலாமே என்று எப்போதாவது தோன்றியதுண்டா? பிறகு ஏன் தாமதம்! உடனே உங்கள் கதையைக் குறும்படமாக எடுத்து 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி நடத்தும் போட்டிக்கு அனுப்பி வையுங்கள்!

இந்த வட்டாரத்தின் அடுத்த சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

சிங்­கப்­பூர், மலே­சிய மக்­க­ளுக்­காக 'ஸீ ரீல்' குறும்­பட போட்­டியை ஏற்­பாடு செய்­துள்­ளது 'ஜீ தமிழ்' தொலைக்­காட்சி.

போட்­டி­யில் தேர்வு பெறும் முதல் எட்டு குறும்­ப­டங்­கள் Zee Tamil APAC தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யில் ஒளி­ப­ரப்­பப்­படும்.

போட்­டி­யின் நடு­வர் குழு­வில், இயக்­கு­நர் ஏ எல் விஜய், சிங்­கப்­பூர் தொலைக்­காட்சி எழுத்­தா­ளர், இயக்­கு­நர் மற்­றும் நிர்­வாக தயா­ரிப்­பா­ளர் திரு யாசிர், பிர­பல சிங்­கப்­பூர் இயக்­கு­நர் திரு ராஜ­கோ­பால், மலே­சிய இயக்­கு­நர், ஒளிப்­ப­தி­வா­ளர் திரு­வாட்டி விமலா, ஸீ தமி­ழின் நிர­லாக்­கத் தலை­வ­ரும், ஸீ தொலைக்­காட்­சி­யின் துணை வர்த்­த­கத் தலை­வ­ரு­மான தமிழ் தாசன் ஆகி­யோர் உள்­ள­னர் (படம்).

15 வய­திற்­கும் மேற்­பட்ட, சிங்­கப்­பூர், மலே­சிய குடி­யி­ருப்­பா­ளர்­கள் பங்­கேற்­க­லாம்.

தமி­ழில், 5 - 10 நிமி­டங்­க­ளுக்­குள் குறும்­ப­டம் இருக்­க­வேண்­டும்.

MP4 வடி­வத்­தில் குறும்­பட காணொளி சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும். தேர்­வு­ செய்­யப்­படும் எட்டு இறு­திப் போட்­டி­யா­ளர்­கள் தங்­கள் குறும்­ப­டத்தை mov. வடி­வத்­தில் சமர்ப்­பிக்கவேண்­டும். குறும்­ப­டங்­களை அனுப்ப வேண்­டிய இறுதி நாள்: டிசம்­பர் 20ஆம் தேதி.

மேல் விவ­ரங்­க­ளுக்கு காண்க: https://www.zeetamilapac.com/zeereel/