சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது நரை முடியை வெளியே காட்ட மாட்டார்கள். ஆனால் நடிகர் அஜித் ஒருவர் மட்டுமே நரைத்த முடியுடன் படத்தில் நடித்தார். அதுபோல் தற்பொழுது நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள படத்தில் ஒரு துளிகூட மேக்கப் இல்லாமல் தலைமுடி பாதி நரைத்தும் கன்னமெல்லாம் சுருங்கியும் வெளியிட்டு உள்ளார். புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கனத்த இதயத்துடன் "என்ன சிம்ரன் இப்படி ஆகிவிட்டீர்கள்?" என்று வருந்தினாலும் "வயதானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உங்களை விட்டுப் போகவில்லை," என்று சிம்ரனை வர்ணித்து ரசித்து வருகின்றனர் சில தீவிர ரசிகர்கள். இவர் இயக்குநர் கௌதம் மேனனுடன் இணைந்து 'பாவக் கதைகள்' என்ற இணையத் தொடரில் நடித்து அந்தத் தொடர் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு படத்தை வெளியாக்கி இருக்கிறார்.
'90களின் கனவுக்கன்னியா இவர்?'
1 mins read
-

