நடிகை அமலா பால், மரத்தைச் சுற்றி ஒரு பாடலுக்கு ஆடும் நாயகி என்று நடிப்பதைத் தவிர்த்துவிட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் பாலிவுட் திரைப் பாடகர் ரவீந்தர் சிங்கை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் செய்தியுடன் புகைப்படங்கள் வெளியாக மறுபடியும் அவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது.
எல்லாம் முடிந்துவிட்டது என்பதுபோல நண்பராக இருந்த ரவீந்தர் சிங், தன் அனுமதியில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டதாக அமலாபால் ரவீந்தர் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு பதிந்திருந்தார். இந்த வழக்கில் அமலா பாலுக்கு சாதகமாகத் தீர்ப்பு வெளியானது. அதைக் கொண்டாடும் வகையில் அமலா பால் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வண்ண மயமான ஒளி நிறைந்த அரங்கில் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார். படத்தில் அவருக்கு அருகே இருக்கும் மேசையில் மதுபாட்டில்கள் இருப்பதுபோல காணப்படுவது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

