தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த ஆண்டு 2021 ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 'தளபதி 65'வது படத்தை யார் இயக்குவார்? எப்போது படப்பிடிப்பு துவங்கும்? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் 'விஜய் 65'வது படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கப் போவதாகவும் இந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று முன்தினம் ஒரு சிறிய காணொளி மூலம் 'சன் பிக்சர்ஸ்' அறிவித்தது.
இந்தக் காணொளி வெளியான நொடி முதல் கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் தலைப்பு 'தளபதி 65'தான்.
திரைத்துறையில் சுமார் 28 ஆண்டுகள் பயணித்து வரும் நடிகர் விஜய், ரசிகர்கள் மனதில் 'தளபதியாகவே' இடம் பிடித்திருக்கிறார் என்றால் அவரது கடுமையான உழைப்பும் உணர்வுபூர்வமான நடிப்பும்தான் காரணம்.
திரைத்துறையில் நீடிக்க வேண்டுமென்றால் மனதளவிலும் உடலளவிலும் இளமையாகவே இருக்கவேண்டும். நடிகர் விஜய்க்கு தற்பொழுது 46 வயதாக இருந்தாலும் அவர் இன்றும் ஒரு கல்லூரி மாணவரைப் போலத்தான் காட்சியளிக்கிறார்.
நேற்றைய தினம் வெளியான 'விஜய் 65' காணொளியில் நடிகர் விஜய் எளிமையாகவும் இளமையாகவும் தோற்றம் அளித்துள்ளது
ரசிகர்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் விஜய்யின் புதிய முடி அலங்காரம் அவரது அழகை மேலும் மெருகேற்றி உள்ளது.
விஜய்யின் இந்த புதிய தோற்றத்தை விரும்பி உள்ள அவரது ரசிகர்கள், அந்தக் காணொளியில் விஜய் இடம்பெற்றுள்ள காட்சிகளையெல்லாம் படமாக இணையத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

