விஜய்யின் 65வது படத்தை முன்னதாக இயக்க இருந்த ஏஆர் முருகதாஸ் அந்தப் படத்திலிருந்து விலகியதன் காரணம்
தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்க்கார்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தக் கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக விஜய்யின் 65வது படத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் வெளியேறினார் என்ற தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இவர்களின் கூட்டணி உடைந்ததற்கு என்ன காரணம்? என கோலிவுட்டில் விசாரித்தபோது இசையமைப்பாளர் அனிருத்தை கை காட்டுகிறார்கள்.
இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தைத் தயாரிக்கும் 'சன் பிக்சர்ஸ்' விஜய்யை வைத்து இயக்கப்போவது 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் என்றும் இசையமைப்பாளர் அனிருத் என்றும் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இயக்குநர் நெல்சனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாம். முன்பு ஏஆர் முருகதாஸ் விஜய்யின் படத்தை இயக்க இருந்தபோது அந்தப் படத்திற்குத் தன்னை இசையமைப்பாளராகப் போடாமல் இசை
யமைப்பாளர் தமனை இசையமைக்க இயக்குநர் ஏஆர் முருகதாஸ் நியமித்தது அனிருத்துக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
எனவே சில பல விஷயங்களைச் செய்து விஜய், முருகதாஸ் கூட்டணி உடையக் காரணமாக இருந்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத் என்கிறார்கள்.

