இசையமைப்பாளரானார் ஜெய்

இசையமைப்பாளரானார் ஜெய்

1 mins read
e0ea25de-20c3-4437-a805-e455c8735fa0
படம்: தமிழக ஊடகம் -

தமிழ் சினி­மா­வில் இளம் கதா­நா­ய­க­னாக வலம் வரும் ஜெய், தற்­பொ­ழுது இசை­ய­மைப்­பாளராக மாறி இருக்­கி­றார்.

சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் 'ஷிவ ஷிவா' என்ற படத்தில் நடித்­தி­ருக்­கி­றார் ஜெய். இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்­துள்­ளார்.

இந்­தப் படத்­தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார் ஜெய். அதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வய­தில் பல நாட்­களை நான் ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தில் கழித்திருக்கிறேன். 'அண்­ணா­மலை', 'பாட்ஷா' ஒலிப்­ப­தி­வின்­போது நானும் அங்கு இருந்­தி­ருக்­கி­றேன்.

"இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் என் கன­வாக இருந்­தது. எப்­ப­டியோ நடி­க­னா­கி­விட்­டேன். இந்த ஊர­டங்­கு நேரத்தில் இந்­தப் படத்­திற்கு இசை அமைக்க முடிந்தது. எனக்­குள் இருந்த இசைக் கலை­ஞன் வெளி­யில் வந்­தது குறித்து மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.