சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் 'கபடதாரி'. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.
இவர் ஏற்கெனவே 'சைத்தான்', 'சத்யா' ஆகிய படங்களை இயக்கியவர். "கபடதாரி என்றால் பாசாங்குக்காரன், பசுத்தோல் போர்த்திய புலி எனப் பல அர்த்தங்கள் உள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குற்றம் தொடர்பில் மீண்டும் உண்மையைத் தேடி மேற்கொள் ளப்படும் பயணம்தான் கதை.
இப்போது அந்த குற்றவாளி எப்படியிருப்பான், எந்த மாதிரி அதன் தேடுதல் நீள்கிறது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறோம்.
படத்தில் நிறைய பேர் புதுமுகங்கள்தான். இந்தக் கதைக்கு அப்படித்தான் தேவைப்பட்டார்கள். சிபிராஜும் நந்திதாவும் அருமையாக நடித்துள்ளனர்.
நாசர், ஜெயப்பிரகாஷ் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்," என்கிறார் இயக்குநர்.

