நயன்தாராவின் 'நெற்றிக்கண்'

நயன்தாராவின் 'நெற்றிக்கண்'

3 mins read
11619f6d-c6bc-41b5-94c9-483400b93baa
படம்: தமிழக ஊடகம் -

'நெற்­றிக்­கண்' படம் ரசி­கர்­க­ளுக்கு அனைத்து வகை­யி­லும் மன­நி­றை­வைத் தரும் என்­கிறார் நயன்­தாரா.

மிலிந்த்­ராவ் இயக்­கும் இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த நிலை­யில் படத்­தின் தொழில்­நுட்­பப் பணி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் மிலிந்த்­ராவ். இவர் இயக்­கிய 'அவள்' படம் ரசி­கர்­க­ளால் வெகு­வா­கப் பாராட்­டப்­பட்­டது. அதன்­பின்­னர் மூன்­றாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு 'நெற்­றிக்­கண்' மூலம் ரசி­கர்­க­ளைச் சந்­திக்க உள்­ளார்.

"நல்ல கதை­யைத் தர­வேண்­டும் என்­ப­தற்­காக மூன்­றாண்­டு­கள் அவ­கா­சம் எடுத்­துக்­கொண்டு எனது குழு­வு­டன் உழைத்­தேன். அதன்­பி­றகு கதையை நயன்­தாரா­வி­டம்­தான் முத­லில் சொன்­னேன். ஒரு சரா­ச­ரி பார்­வை­யா­ள­ராக 2 மணி நேரம் கதை கேட்­ட­வர், அதன் முடி­வில் தாமே அதை தயா­ரிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"அவ­ரது இந்த முடிவே எனது முதல் வெற்­றி­யா­கத் தோன்­றி­யது. அவ­ரது தயா­ரிப்பு நிறு­வ­னம் தயா­ரிக்­கும் முதல் படம் இது. பிறகு விக்­னேஷ் சிவ­னைச் சந்­தித்து கதை சொன்­ன­வு­டன் அவ­ரும் திருப்தி தெரி­வித்­தார். ஒரு தயா­ரிப்­பா­ள­ராக எந்­தக் கெடு­பி­டி­யும் இன்றி எனக்கு முழு சுதந்­தி­ரம் அளிக்­கப்­பட்­டது," என்­கி­றார் மிலிந்த்­ராவ்.

கதைப்­படி நயன்­தாரா பார்­வை­யற்ற பெண்­ணாக வரு­கி­றா­ராம். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்­காக மிக­வும் மெனக்­கெட்­டா­ராம்.

பார்­வை­யற்ற ஒரு பெண்­ணின் தோற்­றம், உடல்­மொழி, உடை­ய­ணி­யும் பாங்கு, கைப்­பி­டி­யு­டன் நடப்­பது என்று ஒவ்­வொரு விஷ­யத்­துக்­கா­க­வும் முறை­யாகப் பயிற்சி மேற்­கொண்ட பிறகே படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றுள்­ளார். மறு­நாள் பட­மாக்­கப்­பட வேண்­டிய காட்­சி­க­ளுக்­கான வச­னங்­களை முந்­தைய நாள் இரவே படித்து மனப்­பா­டம் செய்­து­விடு­வா­ராம்.

"ஏரா­ள­மான படங்­களில், பெரிய நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்த பிற­கும் தனி நாய­கி­யாக வெற்­றிப் படங்­க­ளைத் தந்த பிற­கும் இந்­த­ளவு அர்ப்­ப­ணிப்­பு­டன் ஒரு கதா­நா­யகி இருப்­பது எனக்­குப் பெரிய விஷ­ய­மா­கப் படு­கிறது. நயன்­தா­ரா­வைக் கண்டு ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றேன். அவரை உச்ச நட்­சத்­தி­ரம் என்று ரசி­கர்­கள் ஏன் கொண்­டா­டு­கி­றார்­கள் என்­பது இப்­போ­து­தான் புரி­கிறது," என்­கி­றார் மிலிந்த்­ராவ்.

நக­ரி­லுள்ள இளம்­பெண்­களை சைக்கோ குணா­தி­ச­யம் கொண்ட ஒரு­வன் அடுத்­த­டுத்­து கடத்­திச் செல்­கி­றான். இந்­நி­லை­யில் பார்­வை­யற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான இளம்­பெண் தன்­னு­டைய அறிவை, அதா­வது மூன்­றா­வது கண் எனக் குறிப்­பி­டப்­படும் நெற்­றிக்­கண்­ணைப் பயன்­ப­டுத்தி அவ­னைக் கண்­டு­பி­டிப்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை. அஜ்­மல், 'காலா' மணி­கண்­டன், 'வட­சென்னை' சரண் என்று பலர் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"நயன்­தா­ரா­வு­டன் மோது­ம­ள­வுக்கு பல­மான வில்­லன் கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்கி உள்­ளோம். தொழில்­நுட்ப ரீதி­யில் நல்ல குழு அமைந்­துள்­ளது. பல ஆண்­டு­க­ளுக்கு முன் ரஜினி நடித்த படம் 'நெற்­றிக்­கண்'. அந்­தத் தலைப்பு எனது கதைக்­குப் பொருத்­த­மாக இருக்­கும் எனத் தோன்­றி­யது.

"மேலும் பிர­ப­ல­மான தலைப்பு என்­பது கூடு­தல் பல­மாக இருக்­கும். அத­னால் தலைப்­புக்­கான உரி­மை­யைக் கேட்டு கவி­தா­லயா நிறு­வ­னத்­தி­டம் பேசி­னோம். கொஞ்­சம்­கூ­ட தயங்­கா­மல் அனு­மதி அளித்­த­னர். நயன்­தாரா மேடம் தமி­ழில் நடித்த முதல் படத்தை கவி­தா­லயா நிறு­வ­னம்­தான் தயா­ரித்­தது என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"ஊர­டங்­கின்­போது படப்­ப­ணி­கள் பாதிக்­கப்­பட்­டன. அது முடி­வுக்கு வந்து படப்­பி­டிப்­பைத் தொடங்­க­லாமா என்று கேட்­ட­தும் தைரி­ய­மாக 'நான் தயார்' என்­றார் நயன்­தாரா. அர­சாங்­கம் வகுத்­துள்ள விதி­மு­றை­களை முறை­யா­கக் கடைப்­பி­டித்து படப்­பிடிப்பை நடத்­தி­னோம்.

"படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ருக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அதனால் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி படப்பிடிப்பை சுமூகமாக முடித்துள்ளோம்," என்கிறார் மிலிந்த்ராவ்.