நான்கு இயக்குநர்கள், நான்கு கதைகள், ஒரே படம்

நான்கு இயக்குநர்கள், நான்கு கதைகள், ஒரே படம்

4 mins read
572bd11f-e6ed-4e6d-a0b1-c19e3f90c6f4
படம்: தமிழக ஊடகம் -

வெற்­றி­மா­றன், கௌதம் மேனன், சுதா கொங்­கரா, விக்­னேஷ் சிவன் என நான்கு வெற்­றிப்­பட இயக்­கு­நர்­கள் சேர்ந்து இயக்­கி­யுள்ள ஆந்­தா­லஜி படம் 'பாவக்­ க­தை­கள்'. நான்கு கதை. வெவ்­வேறு கதைக்களம் என்­றா­லும் 'சாதி வெறி, ஆண­வக்­கொலை' என்ற ஒரு மையப்­புள்­ளி­யில் பய­ணிக்­கிற படங்­க­ளாக இருக்­கின்­றன.

முதல் கதை தங்­கம். இதை சுதா கொங்­கரா இயக்கி உள்­ளார். சாந்­தனு, காளி­தாஸ், பவா­னிஸ்ரீ ஆகி­யோர் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

மளி­கைக் கடை வைத்­தி­ருப்பவரின் மக­னான சாந்­தனு, பால்ய கால நண்­ப­னான வேறு மதத்­தைச் சேர்ந்த காளி­தாஸ் சகோ­தரி பவா­னிஸ்ரீ­யைக் காத­லிக்­கி­றார்.

காளி­தாஸ் ஒரு திரு­நங்கை, மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்­வ­தற்­காக பணம் சேர்க்­கி­றார். ஆனால், அவ­ரைப் பெற்­றோ­ரும் ஊர் மக்­களும்

வெறுக்­கி­றார்­கள்.

தனது நண்­பன் சாந்­தனு மீது காத­லில் இருக்­கும் காளி­தாஸ், நண்­பன் தன் தங்­கை­யைக் காத­லிக்கிறான் என்று தெரிந்­த­தும் சிறு வருத்­தத்­திற்­குப் பின் அவர்­கள் ஊரை விட்டு ஓட உதவி செய்­

கி­றான். அதன்­பின் என்ன நடக்­கிறது என்­ப­து­தான் 'தங்­கம்' கதை.

காளி­தாஸ் நடிப்பு இப்­ப­டத்­திற்கு பெரிய பலம். திரு­நங்கை கதா­பாத்­தி­ரத்­திற்கு பொருந்­தி­யி­ருக்­கி­றார். தமிழ் சினி­மா­விற்கு கிடைத்த சிறந்த நடி­கர் என்று சொல்­ல­லாம். அந்த அள­விற்கு சிறப்­பாக நடித்­துள்­ளார் காளி­தாஸ். சாந்­தனு யதார்த்­த­மான நடிப்பை வெளிப்ப­டுத்தி இருக்­கி­றார்.

காதல் கதையை திரு­நங்கை மூல­மாக கொடுத்தி­ருக்­கி­றார் இயக்­கு­நர் சுதா கொங்­கரா. சமூ­கத்­தில் திரு­நங்­கை­கள் படும் அவ­லத்தை ஒளி­வு­ம­றை­வின்றி காட்­டி­யி­ருக்கி­றார்.

இரண்­டா­வது கதை 'லவ் பண்ண விட்­டு­ட­ணும்'. இதை விக்­னேஷ் சிவன் இயக்­கி­யுள்­ளார். இசை அனி­ருத், அஞ்­சலி, கல்கி கோச்­ச­லின், பதம்­கு­மார் ஆகி­யோர் நடித்­தி­ருக்­கின்­ற­னர்.

கலப்­புத் திரு­ம­ணம் செய்­து­வைத்து அவர்­களை ஆண­வக்­கொலை செய்து வரு­கி­றார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவ­ருக்கு இரண்டு மகள்­கள். இவர்­கள் 2 பேரும் வெவ்­வேறு சாதி உள்­ள­வர்­களைக் காத­லிக்

கி­றார்­கள். ஆண­வக்­கொலை செய்து வரும் பதம் குமார் தன் மக­ளின் காதலை ஏற்­றுக்­கொண்­டாரா? என்­பதே படத்­தின் கதை.

படத்­தில் இரட்டை வேடங்­களில் நடித்­தி­ருக்­கி­றார் அஞ்­சலி. சந்­தோ­ஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்­பில் அசத்தி இருக்­கி­றார் அஞ்­சலி.

தந்­தை­யாக வரும் பதம் குமார், முதன் முத­லில் நடித்­தா­லும் அலட்­டல் இல்­லாத நடிப்பை வெளிப்­ப­டுத்தி இருக்கிறார்.

இவ­ருக்கு அடி­யா­ளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்­ட­லான நடிப்பை வெளிப்­ப­டுத்தி கவ­னிக்க வைத்­தி­ருக்­கி­றார். கல்கி கோச்­ச­லின் அட்­ட­கா­ச­மான நடிப்பு ரசிக்­கும்­படி உள்­ளது.

மூன்­றா­வது கதை 'வான்­ம­கள்'. இந்­தக் கதையை கவு­தம் மேனன் இயக்கியதுடன் சிம்­ரன் ஆதித்யா பாஸ்­க­ரு­டன் நடித்­தும் இருக்­கி­றார்.

மனைவி சிம்­ரன், ஒரு மகன், இரண்டு மகள்­க­ளு­டன் வாழ்ந்து வரு­கி­றார் கவு­தம் மேனன். வய­துக்கு வராத இவ­ரது இரண்­டா­வது மகளை சிலர் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கு­கின்­ற­னர். போலி­சி­டம் சென்­றால் குடும்ப மானம் போய்­வி­டும் எனத் தவிக்­கிறது அந்­தக் குடும்­பம். மகளை பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கி­யது யார் என்­பதை எப்­படி கண்­டு­பி­டித்­தது என்­பதே படத்­தின் மீதிக் கதை.

தந்­தை­யான கவு­தம் மேனன் எந்­தப் பதற்­ற­மும் இல்­லாத நடிப்பை வழங்­கி­யி­ருக்­கி­றார். சிம்­ர­னின் கதா­பாத்­தி­ரம் படத்­திற்கு பெரிய பலம். அனு­பவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்­கி­றார்.

மக­னாக வரும் ஆதித்யா பாஸ்­கர் துணிச்­ச­லாக நடித்­துள்­ளார். மகள்­களும் கொடுத்த வேலையை சிறப்­பாக செய்­தி­ருக்­கி­றார்­கள்.

நான்­கா­வது கதை 'ஓர் இரவு'. இதை வெற்றி மாறன் இயக்கியிருக்­கி­றார். பிர­காஷ்­ராஜ், சாய் பல்­லவி, ஹரி­கி­ருஷ்­ணன் நடித்­தி­ருக்­கி­றார்­கள். வேற்று சாதி இளை­ஞரை காத­லித்து திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் சாய்­ பல்­லவி கண­வ­ரு­டன் பெங்­க­ளூ­ரில் வசிக்­கி­றார்.

மக­ளின் திரு­ம­ணத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்த பிர­காஷ் ராஜ், மகள் கர்ப்­ப­மாக இருப்­பதை அறிந்­த­தும் மனம்­மாறி பெங்­க­ளூ­ருக்கு பார்க்­கச் செல்­கி­றார்.

மக­ளுக்கு வளை­காப்பு நடத்­தப்­போ­வ­தாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வரு­கி­றார். குடும்­பத்­தி­னரை நீண்ட நாட்­க­ளுக்குப் பின் பார்த்­த­தும் பாச மழை பொழி­கி­றார் சாய் பல்­லவி.

இவ்­வாறு மகிழ்ச்­சி­யாக செல்­லும் கதை­யில் சாதி வெறி பிடித்த பிர­காஷ் ராஜ் ஓர் அதிர்ச்சி கொடுக்­கி­றார். அது என்ன என்­பதே படத்­தின் மீதிக்­கதை.

வெற்­றி­மா­றன் இயக்கி இருக்­கும் இப்­ப­டத்­தில் ஆண­வக் கொலையை வெளிப்­ப­டை­யாக காண்­பித்­தி­ருக்­கி­றார்­கள். பார்க்கும்போது பதற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.

தந்­தை­யாக நடித்­தி­ருக்­கும் பிர­காஷ்­ராஜ், சாய் பல்­ல­வி­யின் தந்தை - மகள் பாசம் பார்ப்­போரை நெகிழ வைக்­கின்­றது. இறு­தி­யில் பிர­காஷ் ராஜ் செய்­யும் வேலை­களைப் பார்க்க மன­தில் தைரி­யம் வேண்­டும். கர்ப்­பி­ணிப் பெண்­ணாக வரும் சாய் பல்­ல­வி­யின் நடிப்பு பாராட்­டும்­படி இருக்­கிறது.

இந்­தப் படத்­தைப் பார்த்த பார்­வை­யா­ளர்­கள் பலவிதமான விமர்­ச­னங்­க­ளைக் கூறி வரு­கின்­ற­னர்.

ஒரு சிலர், "ஆண­வக் கொலை­களை மைய­மாக வைத்து நான்கு திற­மை­யான இயக்­கு­நர்­களும் இப்ப­டத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். ஆண­வக்­கொ­லை­யின் பயங்­க­ரத்தை சொன்­ன­வர்­கள் அதற்­கான தீர்வைச் சொல்­லா­தது வருத்­தம்," என்­ற­னர்.

ஒரு சிலர், "திரை­ய­ரங்­கில் வெளி­யி­டப்­படும் படங்­க­ளுக்கு தணிக்கை உண்டு. கதை­கள், காட்­சி­கள், வச­னங்­கள் என எல்­லா­வற்­றிற்­கும் ஓர் எல்லை உண்டு. ஆனால், 'ஓடிடி' தளங்­களில் எந்­த­வி­த­மான தணிக்­கை­யும் இல்­லாத கார­ணத்­தால் தாங்­கள் நினைப்­பதை படங்­க­ளாக எடுப்­பது ஆபத்­தில்­கூட முடி­வ­டை­ய­லாம்," என்­ற­னர்.

"நக­ரங்­க­ளைக் காட்­டி­லும் கிரா­மத்­தில்­தான் சாதி ஆதிக்­க­மும் ஆண­வ­மும் அதி­க­மாக இருக்­கிறது என்­ப­தனை இந்­தத் திரைப்­ப­டம் பேசி­னா­லும் 'ஓடிடி' தளங்­களில் இத்­தி­ரைப்­ப­டங்­கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தால் திரை­ய­ரங்­கில் பார்க்­கும் கிராம மக்­க­ளி­டம் எந்­த­ள­வுக்கு சென்று சேரும் என்­ப­த­னை­யும் எண்­ணிப் பார்க்க வேண்­டும். எனி­னும் இது­போன்ற சாதி­மத சமூ­கப் பிரச்­சி­னை­க­ளைப் பேசும் திரைப்­ ப­டங்­கள் எந்­தத் தளத்­தில் வெளி­யா­னா­லும் அவை வர­வேற்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட வேண்­டும் என்­ப­தை­யும் மறுக்க முடி­யாது," என்­கின்­ற­னர் ஒரு சிலர்.