விரைவில் 'கேஜிஎப் 2'

விரைவில் 'கேஜிஎப் 2'

1 mins read
2065dd1e-cf1f-4a0f-a410-227674ff2aa5
படம்: தமிழக ஊடகம் -

பிர­ஷாந்த் நீல் இயக்­கத்­தில் யஷ் நடித்த கன்­ன­டப் பட­மான 'கேஜி­எப்' தமிழ், தெலுங்கு உள்­ளிட்ட மொழி­களில் வெளி­யாகி மாபெ­ரும் வெற்றி பெற்­றது.

இதை­ய­டுத்து இப்­ப­டத்­தின் இரண்­டாம் பாகம் உரு­வாகி வரு­கிறது.

இதில் பாலி­வுட் நடி­கர் சஞ்­சய் தத் வில்­ல­னாக நடிக்­கி­றார்.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் பிர­ஷாந்த் நீல் "எல்லா உணர்­வும் நிறைந்த ஒரு முழு­மை­யான படப்­பி­டிப்பை நிறைவுசெய்­துள்­ளோம்.

ஒரு சிறந்த படக்­கு­ழு­வுக்­குத் தலை வணங்­கு­கி­றேன். சஞ்­சய் தத் ஒரு நிஜ மாவீ­ரர்.

பெரிய திரை­யில் 'கேஜி­எப் 2' படத்தை பார்க்க ஆவ­லா­கக் காத்­தி­ருக்­கி­றேன்", என்று தன்­னு­டைய டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.