இயக்குநர்களுக்குள் போட்டி

‘மாஸ்­டர்’ படத்­திற்­குப் பிறகு விஜய், இயக்­கு­நர் ஏஆர்முரு­க­தாஸ் கூட்­ட­ணி­யில் ‘தள­பதி 65’ படத்­தில் நடிக்க இருப்­ப­தாக கூறப்­பட்­டது.

‘துப்­பாக்கி’ படத்­தின் இரண்­டாம் பாகம்­போல் கதை அமைத்­தி­ருந்­த­தாக கூறப்­பட்ட நிலை­யில் கதை­யில் திருப்தி ஏற்­ப­டாத நடி­கர் விஜய், கூட்­ட­ணியை மறுத்­து­விட்டு பின்­னர் இயக்­கு­நர் நெல்­சன் திலீப்­கு­மா­ரு­டன் ‘தள­பதி 65’ படத்தை ஒப்­பந்­தம் செய்­துக்­கொண்­டார்.

இயக்­கு­நர் நெல்­சன் தற்­பொ­ழுது சிவ­கார்த்­தி­கே­யனை வைத்து ‘டாக்­டர்’ படத்தை இயக்கி வரு­கி­றார். அதன் பின்­னர் மீண்­டும் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்­காக ஒரு கதை­யைத் தயார் செய்து வைத்­தி­ருந்­தார். அதைத்­தான் நடி­கர் விஜய்­யி­டம் சொல்ல அவ­ரும் கதை நன்­றாக இருக்­கிறது என்று ஒத்­துக்­கொண்­டார். அத­னால் சிறிது வருத்­தத்­தில் இருந்­தார் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன்.

இந்­நி­லை­யில் விஜய்க்­காக தயார் செய்து வைக்­கப்­பட்­டி­ருந்த கதையை சிவ­கார்த்­தி­கே­ய­னி­டம் இயக்­கு­நர் ஏஆர் முரு­க­தாஸ் கூற, கதை­யும் அவ­ருக்­குப் பிடித்­துப் போக அதில் நடிப்­ப­தற்கு சம்­ம­தம் தெரி­வித்து இருக்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

விஜய் வேண்­டாம் என்ற இயக்­கு­ந­ருக்கும் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்­காக கதையை வைத்­தி­ருந்து பின்­னர் விஜய்­யி­டம் போன நெல்­ச­னுக்­கும் இடையே தற்­பொ­ழுது பெரும் போட்டி உண்­டாகி இருக்­கிறது.

இந்­தப் போட்­டி­யில் கட்­டா­யம் வெற்றி பெற்றே ஆக­வேண்­டும் என்று இரண்டு இயக்­கு­ந­ரும் தங்­கள் கதை­களை மெரு­கேற்றி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!