'ஒரு காட்சியில் நடித்தாலும் போதும்'

'ஒரு காட்சியில் நடித்தாலும் போதும்'

2 mins read
0b2fa5bf-93e8-41f9-bcf5-b5f8684ad3bf
-

விஜய் சேது­ப­தி­யு­டன் இணைந்து நடிக்­க­வேண்­டும் என்­பது தமது நீண்ட நாள் ஆசை என்­கி­றார் ஸ்மி­ருதி வெங்­கட்.

'மூக்­குத்தி அம்­மன்' படத்­துக்­குப் பிறகு தனக்­கான ரசி­கர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

எம்ஏ பட்ட மேற்­ப­டிப்பை முடித்­தி­ருப்­ப­வர் அதற்கு சம்­பந்­த­மில்­லாத துறை­யில் கால் பதிப்­போம் என எதிர்­பார்க்­க­வில்லை என்­றும் சினிமா துறை­யில் ஈடு­பட்ட பிறகு அதன் மீதான ஆர்­வம் அதி­க­ரித்­துள்­ளது என்­றும் கூறு­கி­றார்.

"நான் விஜய் சேது­ப­தி­யின் தீவிர ரசிகை. அவ­ரு­டன் இணைந்து ஒரே ஒரு காட்­சி­யில் மட்­டுமே நடிக்க வாய்ப்­புக் கிடைத்­தா­லும் தயக்­க­மில்­லா­மல் ஒப்­புக்­கொள்­வேன். அவ­ரைப் போன்று யதார்த்­த­மா­க­வும் ரசிக்­கும்­ப­டி­யும் நடிப்­பது அவ்வளவு சுல­ப­மல்ல," என்று பாராட்­டு­கி­றார் ஸ்மிருதி.

ஊர­டங்­கின்­போது தொடக்­கத்­தில் எப்­படி பொழு­தைக் கழிப்­பது என்று தெரி­யா­மல் விழித்­த­வர் பிறகு தமக்­குப் பிடித்­த­மான பாடல்­க­ளைக் கேட்­ப­தற்கு அதிக நேரம் ஒதுக்­கி­ய­தா­கக் கூறு­கி­றார்.

இயற்­கையை ரசிப்­பது என்­றால் இவ­ருக்கு ரொம்­பப் பிடிக்­கு­மாம். அத­னால் அவ்­வப்­போது பய­ணங்­கள் மேற்­கொள்­வா­ராம். ஆனால், கொரோனா விவ­கா­ரத்­தால் வீட்­டிற்­குள் முடக்­கி­விட்­ட­தா­கப் புலம்­பு­கி­றார்.

"ஆனா­லும், கொரோனா புண்­ணி­யத்­தில் குடும்­பத்­தா­ரு­டன் நேரத்­தைச் செல­விட வாய்ப்­புக் கிடைத்­தது. வீட்­டில் என் பாட்டி, அக்கா குழந்­தை­க­ளு­டன் நேரம் செல­விட்­டேன். தின­மும் ரக­ளை­யா­கப் பொழுது கழிந்­தது. கூடவே ஓவி­யம் தீட்டு­வது, தோட்­டப் பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றி­லும் கவ­னம் செலுத்­தி­னேன்."

காதல் அனு­ப­வம் உண்டா?

"உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால் நான்­கைந்து பேர் என்­னைக் காத­லிப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர். 'மூக்­குத்தி அம்­மன்' வெளி­யான பிறகு இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. என் வருங்­கா­லக் கண­வர் உய­ர­மா­ன­வ­ராக உடற்­பயிற்­சி­யில் ஆர்­வ­முள்­ள­வ­ராக இருக்­க­வேண்­டும். அதை­விட என்­னு­டைய அறிவை அதி­கப்­ப­டுத்­து­ப­வ­ரா­க­வும் இருக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"எனது பூர்­வீ­கம் திரு­நெல்­வேலி என்­றா­லும் பிறந்து வளர்ந்­தது எல்­லாம் சென்­னை­தான். ரொம்ப ஜாலி­யாக, இயல்­பா­கப் பேசிப் பழ­கக் கூடி­ய­வள். சில சம­யங்­களில் சட்­டென கோபப்­பட்டு விடு­வேன். ஆனால் அடுத்த சில நிமி­டங்­க­ளி­லேயே அந்­தக் கோபம் மறைந்­து­வி­டும்.

"எனது இந்த இயல்­பை­யும் ஏற்­றுக்­கொண்டு அனு­ ச­ரித்­துப் போகும் ஒரு­வர்­தான் எனக்கு கண­வ­ராக அமைய வேண்­டும்," என்­கி­றார் ஸ்மி­ருதி வெங்­கட்.