விஜய் படத்துக்கு போட்டியாக களமிறங்கும் 'ஈஸ்வரன்'

1 mins read
f51a0b64-d047-4e73-b04d-4f0144ae7109
-

'ஈஸ்வரன்' படத்தை முடித்த கையோடு சிம்பு 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்துக்குப் போட்டியாக 'ஈஸ்வரன்' பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதனால் விஜய் தரப்பில் அதிர்ச்சி நிலவ, சிம்பு ரசிகர்களோ உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், பட வெளியீடு குறித்து சிம்பு முடிவெடுக்க வில்லையாம். படத்தின் தயாரிப்பாளர் எடுத்த முடிவுதான் என்கிறார்கள். இந்நிலையில் 'மாஸ்டர்' படத்துக்குச் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் அதன் பொங்கல் வெளியீடு தடைபடலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் 'ஈஸ்வரன்' எந்தப் போட்டியும் இன்றி வசூலை வாரிக்குவிக்க வாய்ப்புள்ளது.