நடிகை நயன்தாரா தெலுங்கு படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார். நடிப்பு என்று வந்தால் அனைத்து வேடங்களிலும் நடிக்கவேண்டும் என்று அந்த வில்லி வேடத்தில் தற்பொழுது தமன்னா நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
முதல் திரைப்படத்தில் பார்த்ததுபோலவே இன்று வரை அதே இளமை
யுடன் அதே
புத்துணர்ச்சியுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.
இந்தியில் வெளியான 'அந்தாதுன்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய
விருதுகளைப் பெற்று
மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தைத் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில்
மறுபதிப்பு செய்ய இருக்கின்றனர். தெலுங்கு மறுபதிப்பில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்திப் படத்தில் கண்களில் கொலை வெறியுடன் நடித்திருப்பார் தபு. அந்த சவாலான வேடத்தில்தான் தற்பொழுது தமன்னா நடித்துக்கொண்டு இருக்கிறார்.
'பாகுபலி'யில் இவர் ஒரு
போராளியாக ஆக்ரோஷமாக நடித்திருப்பார். அந்த தமன்னாவை
இந்தப் படத்திலும் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
தனி கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா தமிழில் வெளியான 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படத்தில் முதன் முறையாக பேய் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். நகைச்சுவை கலந்த படமாக
உருவான இந்தப்படம் அனைவரையும் கவர்ந்து சுமாரான வெற்றியைப் பெற்றது.
திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அதேசமயம், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பெரும் தொகையை வசூல் செய்து வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கு
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சரிலெரு நீகேவ்வாரு' திரைப்படத்தில் 'டங் டங்' பாடலுக்கு நடனமாடிச் சென்றார். அதேபோல 'கேஎஃப்சி' திரைப் படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தார்.
சென்ற ஆண்டு வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் ஆகியோரின் நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது 'F2' திரைப்படம்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்பொழுது 'F3' தயாராகி வரும் நிலையில் 'F2'வில் நடித்த அதே நடிகர்கள்தான் இந்தப் படத்திலும் நடிக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மேலும் இதனை நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.
மேலும் கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'லவ் மாக்டைல்' திரைப்படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'குர்த்துண்டா சீதாகளம்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தமன்னா.

