'மாஸ்டர்' திரைப்படம் இந்தியிலும் வெளியாகிறது.
இந்திப் பதிப்புக்கு 'விஜய் த மாஸ்டர்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இத்தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தணிக்கை செய்யப்பட்ட 'மாஸ்டர்' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டது.
சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கை அதிகாரிகள் அறிவுறுத்தியபோது படக்குழு அதை ஏற்க மறுத்துவிட்டது.
அதனால்தான் 'யு' சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தியிலும் 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி பொங்கலை ஒட்டி இப்படம் வெளியீடு காணும் என்று கூறப்பட்ட நிலையில் ஜனவரி 7ஆம் தேதியே திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

