'சேவையாற்ற விரும்புகிறேன்'

'சேவையாற்ற விரும்புகிறேன்'

2 mins read
2441e3b4-d35b-4052-ae62-525d29496bda
-

மனித வாழ்க்­கை­யில் இருக்­கும் உண்­மை­களை அப்­பட்­ட­மாக காட்­டக்­கூ­டிய திரைப்­படங்­க­ளைப் பார்ப்­ப­தில் தமக்கு அலா­தி­யான விருப்­பம் உண்டு என்­கி­றார் சாய் பல்­லவி.

சில உண்­மை­களை கன்­னத்­தில் அறை­வது போல் காட்­சிப்­ப­டுத்துவதும் அவ­சி­யம் என தாம் கரு­து­வ­தா­க­வும் அண்­மைய பேட்டி ஒன்­றில் தெரி­வித்­துள்­ளார்.

"நான் சோக­மான படங்­களை விரும்­பிப் பார்ப்­ப­தாக சிலர் கூறு­கி­றார்­கள். அது சரி­யல்ல. உண்­மை­களை யதார்த்­த­மா­கச் சொல்­லும் படங்­கள்­தான் எனது தேர்வு.

"நம்­மில் பல­ரும் சில நாடு­களில் சாலை­யில் போக்­கு­வ­ரத்து சமிக்ஞைக்காக காத்­தி­ருக்­கும் கார்­க­ளைத் துடைத்­து­விட்டு காசு கேட்­கும் சிறு­வர்களைப் பார்த்தி­ருப்­போம். அவர்­க­ளின் நிலை குறித்து யோசித்­தி­ருக்­கி­றீர்­களா?

"அங்கு இருந்து சென்ற பிறகு அந்­தச் சிறு­வர்­க­ளைப் பற்றி மீண்­டும் நினைத்­துப் பார்த்­தி­ருக்­கி­றோமா?

"அந்­தச் சிறு­வர்­கள் தங்­க­ளுக்­குக் கிடைக்­கும் பணத்தை உட­ன­டி­யாக தங்­கள் தாயா­ரி­டம் கொடுப்­பார்­கள். அந்­தப் பெண்­ம­ணி­யி­டம் மேலும் ஒரு கைக்­ குழந்தை இருக்­கும். எனக்கே இந்த நிலைமை இருக்­கும்­போது ஏன் இன்­னொரு குழந்­தையை அம்மா பெற்­றுக்­கொண்­டார்? என்று அந்­தச் சிறு­வர்­கள் நினைத்­தி­ருப்­பார்­களா? என்று நான் யோசித்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் சாய் பல்­லவி.

இந்த எண்­ணத்தை ஒட்­டியே 'கேப்­பர் நாம்' (caper naum) என்ற லெப­னான் நாட்­டுப் படம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாம். அண்­மை­யில் இதை இணை­யத்­தில் பார்த்­த­போது மன­மு­டைந்து போனா­ராம்.

கசப்­பான உண்­மை­களை ஒளித்து வைக்­கா­மல் அந்­தப் படம் விரி­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அண்­மை­யில் தாம் நடித்த 'ஓர் இரவு' ஆந்­தா­லஜி பட­மும் இந்த வகை­யைச் சார்ந்­த­து­தான் என்­றும் கூறு­கி­றார்.

சாய் பல்­ல­வி­யும் மருத்­துவ மாணவி என்­ப­தால் கொரோனா கால­கட்­டத்­தில் மிக­வும் கவ­ன­மாக செயல்­பட்டு வரு­கி­றார். தம்­மைத் தற்­காத்­துக் கொள்­வ­து­டன் படக்­கு­ழு­வி­ன­ரின் பாது­காப்பை உறுதி செய்­வ­தி­லும் அக்­கறை செலுத்­து­கி­றார்.

"இப்­போது ஒரு தெலுங்­குப் படத்­தில் நடித்து வரு­கி­றேன். அவர்­கள் மிகுந்த முன்­னெச்­ச­ரிக்­கை­யோடு படப்­பி­டிப்பை நடத்தி வரு­கி­றார்­கள். அனை­வரது உடல் வெப்­ப நிலையும் பரி­சோ­திக்­கப்­ப­டு­கிறது. சமூக இடை­வெ­ளி­யைக் கடை­பி­டிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது.

"விராட பரு­வம்' படப்­பி­டிப்பு இப்­போது அதிக கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நடந்து வரு­கிறது. காட்சி பட­மாக்­கப்­ப­டும்­போது மட்­டும் சேர்ந்து நிற்­போம். நடித்து முடித்­த­தும் சமூக இடை­வெ­ளி­யு­டன் வில­கியே நிற்­போம்.

"எனி­னும் ஒட்­டு­மொத்­தத்­தில் பார்க்­கும்­போது எல்­லோ­ரு­டைய மன­தில் இருந்­தும் கொரோனா குறித்த பயம் கிட்­டத்­தட்ட விலகி­விட்­டது," என்­கி­றார் சாய் பல்­லவி.

மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற வேண்­டும் எனும் நோக்­கத்­து­டன்­தான் மருத்­து­வம் படித்­தா­ராம். இருப்பினும், கொரோனா காலத்­தில் தம்­மால் மருத்­து­வச் சேவையை அளிக்க முடி­ய­வில்லை என்று வருத்­தப்­ப­டு­கி­றார்.

"ஆறு ஆண்­டு­கள் மருத்­து­வம் படித்­துள்­ளேன். கொரோனா காலத்­தில் அதிக மருத்­து­வர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர். முன்பே தேர்வு எழுதி முடித்­தி­ருந்­தால் இந்­நே­ரம் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்ற தகுதி பெற்­றி­ருப்­பேன். இக்­கட்­டான நேரத்­தில் மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற முடி­ய­வில்லை என்ற வருத்­தம் அதி­க­மாக உள்­ளது.

"சிறந்த மருத்­து­வ­ரா­கப் பெய­ரெ­டுக்­க­வேண்­டும் என்­ப­து­தான் எனது விருப்­பம்," என்று சொல்­லும் சாய் பல்­லவி, தேர்வு முடி­வு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கி­றார். அவ­ரது லட்­சி­யத்­தின்­படி தேர்­வில் வெற்றி பெற்று விட்­டால் மருத்­து­வர் சாய் பல்­ல­வி­யின் மக்­கள் சேவை விரை­வில் தொடங்­கக்­கூ­டும்.