சூர்யாவும் அவரது தம்பியும் இணைந்து அறக்கட்டளை மூலம் செய்கிற உதவிகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த செய்தி.
ஆனாலும் வெளியில் தெரியாமல் செய்யும் உதவிகள் எப்போதாவதுதான் தெரிய வரும். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் அண்மையில் நடந்தது.
சூர்யா ஜோதிகாவைத் திருமணம் செய்துகொண்டபோது தங்கள் வீட்டில் நீண்ட காலமாக வேலைப் பார்த்த கார் ஓட்டுரின் காலில் விழுந்து சூர்யா ஆசிர்வாதம் பெற்றார்.
அதுபற்றிக் கேட்டபோது, "பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து அவர்தான் எங்களைப் பத்திரமாக அழைத்துச் செல்வார். நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரிடம் ஆசி வாங்குவது எவ்வளவு முக்கியம் என்று எனக்குத்தான் தெரியும்," என்று சொல்லியிருந்தார்.
அதுபோல் தற்பொழுது உள்ள ஓட்டுநரின் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவரை வீட்டிற்கு அழைத்து, விருந்து வைத்தார் சூர்யா. பின்னர் ஜோதிகா கர்ப்பமாக இருந்தபோது பார்த்த அதே மருத்துவரிடம் இந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று இனிமேல் இங்கேயே பார்த்துக்கொள்ளுங்கள், பிரசவ செலவு அனைத்தும் என்னுடையது என்று சொல்லி அந்தக் கார் ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து இருக்கிறார் நடிகர் சூர்யா.

