மாயாஜாலப் படமாக உருவாகிறது 'அஷ்டகர்மா'

1 mins read
8273c349-26a4-40fc-8813-3c421b2948a6
படம்: தமிழக ஊடகம் -

அறிமுக இயக்குநர் விஜய் தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சி.எஸ்.கிஷன் நடிப்பில் உருவாகும் படம் 'அஷ்டகர்மா'.

'மெர்சல்', 'பாகுபலி', 'விவேகம்' உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்த மிஸ்ரி என்டர்பிரைசஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இது கற்பனைச் சம்பவங்களை­யும் மாயா­ஜாலங்களையும் மையமாக வைத்து உருவாகும் படம்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கிறார்.

கதைப்படி கிஷன் மனோதத்துவ மருத்துவராக வருகிறார். ஷ்ரிதா சிவ தாஸ், நந்தினி ராய் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

"படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்," என்கிறார் இயக்குநர் விஜய் தமிழ்ச்செல்வன்.