'மாஸ்டர் நிச்சயம் சாதிப்பார்'

'மாஸ்டர் நிச்சயம் சாதிப்பார்'

3 mins read
89480442-538f-4405-9ad0-801feb8f12a3
படங்கள், செய்திகள்: தமிழக தகவல் சாதனம் -

ரசி­கர்­க­ளைச் சந்­திக்க 'மாஸ்­டர்' முழு­வீச்­சில் தயா­ரா­கி­விட்ட நிலை­யில் அப்­ப­டம் குறித்த பல்­வேறு சுவா­ர­சி­ய­மான தக­வல்­க­ளைப் பேட்டி ஒன்­றில் பகிர்ந்துகொண்­டுள்­ளார் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ்.

இவ­ரது இயக்­கத்­தில் கார்த்தி நடித்த 'கைதி' படத்­தைப் பார்த்த பிறகே விஜய் இவ­ரைத் தேர்வு செய்­த­தா­கக் கூறப்­ப­டு­வது சரி­யல்ல என்­றும் அப்­ப­டம் வெளி­யா­வ­தற்கு முன்பே 'தள­பதி 64' படத்­துக்குத் தாம் தேர்வு செய்­யப்­பட்டுவிட்­ட­தா­க­வும் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

"விஜய் சார் புது இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்­ப­தாக எனக்­குத் தக­வல் கிடைத்­த­போது, 'கைதி' படப்­பிடிப்­பில் இருந்­தேன். அத்­த­க­வல் உண்­மை­தானா என விஜய் சாரின் மேலா­ளர் ஜெக­தீ­ஷைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது அவ­ரும் அதை உறு­திப்­ப­டுத்­தி­னார். அடுத்த இரு தினங்­களில் விஜய் சாரை நேரில் சந்­திக்­க­வும் ஏற்­பாடு செய்­தார்.

"அந்த நேரத்­தில் விஜய் சாருக்­காக உரு­வாக்­கிய கதையை ஒரு வரி­யில் மட்­டுமே அவ­ரி­டம் விவ­ரிக்க முடிவு செய்­தேன். அவ­ருக்­குப் பிடித்­தி­ருந்­தால் மகிழ்ச்சி. இல்­லை­யெ­னில் ஒரே ஒரு புகைப்­ப­டம் மட்­டும் எடுத்­துக்­கொண்டு திரும்­பி­வி­ட­லாம் என்­று­தான் நினைத்­தி­ருந்­தேன்.

"ஆனால், அவர் அரை மணி நேரம் என்­னோடு பேசி­னார். அதற்­குள் நான் அவ­ரி­டம் சொல்ல நினைத்த அனைத்­தை­யும் முழு­மை­யாக விவ­ரித்துவிட்­டேன். 'இரண்டு நாள் அவ­கா­சம் கொடுங்­கள். இந்­தக் கதை என் மன­துக்­குள் ஓடு­கி­றதா என்று பார்க்­கி­றேன்' என்­றார் விஜய் சார். இதை­ய­டுத்து மீண்­டும் படப்­பி­டிப்­பில் கவ­னம் செலுத்­தி­னேன்.

"ஆனால் மறு­நாளே மேலா­ளர் ஜெக­தீஷ் தொடர்பு கொண்டு 'தள­பதி 64 படத்­தின் இயக்­கு­நர் நீங்­கள்­தான்' என்­றார். இப்­படி சற்­றும் எதிர்­பா­ராத நிலை­யில் அமைந்­த­து­தான் 'மாஸ்­டர்' பட வாய்ப்பு," என்று லோகேஷ் கன­க­ராஜ் கூறி­யுள்­ளார்.

கதை விவா­தம் தொடங்­கிய போதே விஜய்க்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் ஒரு வில்­லன் கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்­க­வேண்­டும் என முடிவு செய்­து­விட்­டா­ராம். அப்­போது இவ­ரது நண்­பர் சதீஷ்­தான் வில்­ல­னாக விஜய் சேது­ப­தியை நடிக்­கக் கேட்­க­லாமே எனும் யோச­னை­யையும் முன்­வைத்­தா­ராம்.

சேது­ப­தியை எப்­படி அணு­கு­வது என்று லோகேஷ் யோசித்­த­போது சதீஷ்­தான் அந்த வேலை­யைச் செய்­தி­ருக்­கி­றார். இதை­ய­டுத்து ஒரு நாள் விஜய் சேது­ப­தியே லோகே­ஷைத் தொடர்­பு­கொண்டு பேசி­யுள்­ளார்.

"'என்­னி­டம் பேசு­வ­தில் உனக்கு என்ன தயக்­கம்? நீயே அழைத்­தி­ருக்­க­லாமே. உன் கதையை நம்பி இந்­தப் படத்­தில் நடிக்­கத் தயார்,' என்று சேது­பதி அண்­ணன் சொன்­னார்.

"அதன் பிறகு விஜய் சாரி­டம் என் எண்­ணத்­தைச் சொன்­னேன். நாய­க­னாக நடித்து வரு­ப­வர் வில்­ல­னாக நடிக்க சம்­ம­திப்­பாரா என்று விஜய் சாருக்­கும் சந்­தே­கம். ஆனால் எல்­லாம் நல்­ல­வி­த­மாக அமைந்­தது.

"இரு­வ­ரும் இணைந்து நடித்த காட்­சி­களை 18 நாட்­கள்­தான் பட­மாக்­கி­னோம். அதற்­குள் இரு­வ­ரும் நெருக்­க­மாகிவிட்­ட­னர். படப்­பி­டிப்­பின்­போது இரு­வ­ரும் தங்­க­ளுக்­கான கேர­வன் வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­தவே இல்லை. ஓய்வு நேரத்­தில் நாற்­கா­லி­யில் அமர்ந்து பேசிக்­கொண்டே இருந்­த­னர். இரு­வ­ரும் மிக நெருக்­க­மாகிவிட்­ட­னர் என்­ப­தற்­கான சாட்­சி­தான் விஜய் சாருக்கு சேது­பதி அண்­ணன் முத்­தம் கொடுக்­கும் அந்­தப் புகைப்­ப­டம்," என்று லோகேஷ் கன­க­ராஜ் கூறி­யுள்­ளார்.

கொரோனா விவ­கா­ரத்­தால் 'மாஸ்­டர்' வெளி­யீடு தாம­த­மா­ன­போது படக்­கு­ழு­வி­னர் மிக­வும் சோர்ந்து போனார்­க­ளாம். அச்­ச­ம­யம் விஜய்­யும் அவ­ரது ரசி­கர்­க­ளும்­தான் ஆத­ர­வாக இருந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எக்­கா­ர­ணத்தை முன்­னிட்­டும் 'மாஸ்­டர்' படத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட வேண்­டாம் என ரசி­கர்­கள் வேண்­டு­கோள் விடுத்­த­னர். விஜய் சாரும் அவ்­வப்­போது தொடர்பு கொண்டு, 'நம் குழு­வி­ன­ரைத் தைரி­ய­மாக இருக்­கச் சொல்­லுங்­கள். எப்­போது திரை கண்­டா­லும் இந்­தப் படம் நிச்­ச­யம் வெற்றி பெறும்' என்று கூறு­வார். விஜய் சாரின் வெற்­றிப் படங்­க­ளுக்­கான பட்­டி­ய­லில் இது­வும் இடம்­பெ­றும் என்­ப­தில் சந்­தே­கமே இல்லை," என்று கூறி­யுள்­ளார் லோகேஷ் கன­க­ராஜ்.